Online EB Payment For Rs 4000 And Above : ரூ.4,000க்கு மேற்பட்ட மின் கட்டணங்களை Online-ல் மட்டுமே செலுத்த வேண்டும்

Electricity Bills Above Rs.4,000 To Be Paid Online Only - TNEB Action Notification :

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மின்சார பயன்பாடு ஆனது அதிக உச்சத்தை எட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 27 புதிய தொழிற்சாலைகள் 2021-2024 வரை அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடம் கூடுதலான தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன (கடந்த ஆண்டை காட்டிலும் அதிக அளவில்). இந்த தொழிற்துறை வளர்ச்சி ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கோடை காலங்கள் முன்பை விட அதிக வெப்பம் கொண்டதாக உள்ளது. இதனால் பொதுமக்களின் மின் நுகர்வும் அதிகரித்து உள்ளது. எனவே மின்சார தேவை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

Online EB Payment For Rs 4000 And Above - மின் கட்டண வசூல் நடைமுறையில் சில அதிரடி மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது :

தமிழக மின்சார வாரியம் Oct 2024 முதல் ரூ.4,000க்கு மேற்பட்ட மின் கட்டணங்களை நேரடியாக பணமாக செலுத்த முடியாது மற்றும் Online-ல் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை (Online EB Payment For Rs 4000 And Above) செய்துள்ளது. இனி அடுத்தடுத்து வருகின்ற மாதங்களில் இந்த ரூ.4,000 தொகையை படிப்படியாக குறைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் ரூபாய் ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மின் கட்டணங்களை மட்டுமே மின்வாரிய அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற நிலை ஆனது மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயனர்கள் மின் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ செயலிகள், வங்கிப் பேமெண்ட் சேவைகள் போன்ற பல்வேறு ஆன்லைன் முறைகளின் உதவியுடன் பயனர்கள் எளிதாக கட்டணங்களை செலுத்தலாம். இதன் மூலம் மின்சார செலவுகளை சீராகக் கண்காணிப்பதற்கும் மற்றும் தரமான சேவைகளை வெளிப்படையாக வழங்குவதற்கும் ஏற்றதாக இருக்கும். இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றமாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் நடைமுறையானது பயனாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply