Online Shopping Scam: நீங்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா?

நீங்கள் ஆன்லைனில் பொருள்களை வாங்கும் போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். இன்றைய வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப காலத்தில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து மக்களும் பயன்படுத்தும் எளிய முறையாக ஆன்லைன் மாறிவிட்டது. அது மட்டுமல்லாமல் பிசியான வாழ்க்கையில் மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் நிறைய சிரமம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அதிகரிக்க தொடங்கிவிட்டன. சிறிய டீ சர்ட் முதல் மொபைல் போன் வரை அனைத்தும் ஆன்லைனில் தரமாக கிடைக்க தொடங்கி விட்டன. ஆன்லைன் ஷாப்பிங் பல்வேறு வசதிகளை கொண்டிருந்தாலும் நிறைய மோசடிகளும் சந்தித்து வருகின்றது. முக்கியமாக டெலிவரி செய்யும் போது OTP -களால் நிறைய மோசடிகள் நடந்துள்ளன.

ஆன்லைன் மோசடி :

ஒரு சில முறை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யாவிட்டால் கூட உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்துள்ளதாக கூறி வீட்டு வாசலில் வந்து ஓடிபி கேட்கும் மோசடி முறையும் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் போன் மூலம் OTP கேட்கும் மோசடியும் நடந்துள்ளன. இது மட்டுமல்லாமல் ஸ்கேனர் மூலம் மோசடி செய்யும் முறையும் பரவி உள்ளன. நீங்கள் பொருட்களை ஆர்டர் பண்ணாதது ஞாபகம் இல்லாமல் ஒருவேளை ஓடிபி கூறினால் இ காமர்ஸ் நிறுவனத்தின் மூலம் உங்கள் நிதி தகவலை சேகரித்து பணத்தை திருடும் சூழல் ஏற்படுகிறது. இது போன்ற சூழல்களில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

இன்றைய காலகட்டத்தில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பெரிய ஆடைகள் வரை வீட்டுக்கே வந்து விற்பனை செய்யும் ஏஜென்ட்கள் அதிகரித்துள்ளனர். இது நமக்கு எளிமையாக இருந்தாலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களிடம் வந்து நான் ஏஜென்ட் உங்களுக்கு ஒரு ஓடிபி வந்திருக்கும் அதை சொல்லுங்கள் என கூறுவார்கள்.

நீங்கள் அவரிடம் கவனமாக இருந்து முக்கிய தகவல்களை வழங்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இது மட்டுமல்லாமல் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அதை நீங்கள் தொட்டவுடன் உங்களுடைய தகவல்களை அவர்கள் ஷேர் செய்து கொள்வார்கள். ஆன்லைனில் நீங்கள் பொருட்களை வாங்கும் போதும் விற்கும்போதும் உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது உஷாராக இருக்க வேண்டும்.நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதைக் கூறுங்கள் என கேட்கும் போது எந்தவித முக்கியமான தகவல்களையும் பகிர வேண்டாம்.

Latest Slideshows

Leave a Reply