Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்

சத்தான தின்பண்டங்களை தயாரித்து விற்கும் ஓபன் சீக்ரெட் நிறுவனத்தை அஹானா கௌதம் நடத்தி (Open Secret CEO) வருகிறார். அஹானா கௌதம் ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்தவர். இவர் IIT மும்பையில் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்தார். பட்டம் பெற்ற பின்பு ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் தனது MBA படிப்பை முடித்தார். அஹானா கௌதம் நான்கு வருடங்கள் Proctor & Gamble நிறுவனத்தின் உயர்மட்ட வேலையில் பணிபுரிந்தார். அதன் பின்னர் General Mills-ஸில் பல்வேறு பதவிகளை அஹானா கௌதம் வகித்தார். மேலும் Fox Star ஸ்டுடியோவிற்கு சென்றார்.

அஹானா கௌதம் அமெரிக்க ஹோட்டல்களுக்கு சென்று அதிக கொழுப்பு, கிரீம் நிறைந்த உணவுகளை பல முறை சாப்பிட்டு சலித்துப் போய்விட்டார். தன் உடல்நலத்துக்கு ஏற்ற உணவுகள் கிடைக்காமல் தவித்தார். அதனால் தன் உடல்நலத்துக்கு ஏற்ற உணவுகளை அவரே தயாரித்து சாப்பிடத் தொடங்கினார். இந்த பழக்கம்தான் அவர் சத்தான உணவு பொருட்களைத் தயாரித்து விற்கும் தொழில் (Open Secret CEO) நிறுவனத்தை தொடங்குவதற்கான அடிப்படை காரணமாக இருந்தது.

எப்பொழுதும் அஹானா கௌதமின் மனதில் சொந்தமாக உணவு சுயதொழில் தொடங்குவது பற்றிய யோசனை வளர்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுத் துறையில் இந்தியா பூஜ்ஜியமான கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்தது. குழந்தைகள் மைதா, சர்க்கரை மற்றும் பாமாயிலில் செய்த தின்பண்டங்களை சாப்பிட்டு கொண்டிருந்தனர். அமெரிக்காவில் கைநிறைய சம்பளம் தந்த தனது வேலையை 30 வயதில் உதறிவிட்டு சொந்தமாக சுயதொழில் தொடங்கினார். அஹானா தொழிலைத் தொடங்குவதற்கான (Open Secret CEO) ஆரம்பப் பணத்தை 2019 ஆம் ஆண்டில் அவரது தாயாரிடமிருந்து பெற்றார்.

அஹானா கௌதமின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி (Open Secret CEO)

அஹானா கௌதம் 2019 ஆம் ஆண்டில் தனது புதிய தொடக்கத்தில் பணிபுரியத் தொடங்கி 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளின் இந்தியாவின் முதல் பிராண்டான ஓபன் சீக்ரெட்டை (Open Secret CEO) அறிமுகப்படுத்தினார்.

இந்திய மக்களை செயற்கை நிறங்கள், சுவைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்ற Junk உணவுகளில் இருந்து சத்தான ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய தின்பண்டங்களை (Open Secret CEO) நோக்கி திருப்புவதே அஹானா தனது இலக்காக கொண்டு செயல்பட தொடங்கினார்.

வெளியில் சென்றால் கண்ட பாஸ்ட் புட்களை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளும் இந்திய மக்கள் அஹானா கௌதமின் நல்ல ஆரோக்கியமான தின்பண்டங்களை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தார்கள். இதனால் சீக்கிரமே அஹானாவின் தயாரிப்புகள் மக்களுக்குப் பிடித்துப் போய் பிரபலமடைந்து விட்டது. அஹானாவின் தயாரிப்புகள் மிகுந்த சுவையையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருந்ததால் ஓபன் சீக்ரெட் நிறுவனத்தின் (Open Secret CEO) வியாபாரம் சக்கைப் போடு போட்டது. இந்திய மக்கள் பலரும் அஹானா கௌதமின் சத்தான உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ஒரு பிராண்டாக தொடங்கிய ஓபன் சீக்ரெட் நிறுவனத்தின் பயணத்திலிருந்து, இப்போது அற்புதமான அனைத்து பிராண்டுகளுக்கும் ஒரு கூட்டாளராக உள்ளது. வெற்றி பெற 1% ஐடியா, 99% செயல்படுத்தல் + ஒரு வலுவான அணி தேவை என்கிறார் அஹானா. எனக்கு எனது அம்மா ஒரு உதாரணம். எனது அம்மா என்னை அச்சமற்றவராக ஆக்கினார் மற்றும் எனக்கு ரோல் மாடலாக இருந்தார் என்கிறார் அஹானா.

இப்போது அஹானாவின் ஓபன் சீக்ரெட் நிறுவனம் ரூ.100 கோடி சம்பாதித்துள்ளது. இதுதவிர அஹானா கௌதம் Godrej Tyson Foods Limited-டின் Independent Board Director-ராகவும் உள்ளார். அஹானா கௌதம் இந்தியாவில் பெண்கள் எப்படி தடைகளை உடைத்து பல்வேறு துறைகளில் வெற்றியை அடைகிறார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

Latest Slideshows

Leave a Reply