Oppenheimer Won 7 Oscars : 7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஓப்பன்ஹெய்மர்

ஆஸ்கர் விருதுகளில் அதிகபட்சமாக 7 விருதுகளை (Oppenheimer Won 7 Oscars) வென்று தனது படத்தின் மூலம் நான் கிங் என்பதை நிரூபித்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன். அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவும், நம் இந்தியாவில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கும் 96வது ஆஸ்கர் விழா தொடங்கியது. முதலில் நடந்த ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பல்வேறு நடிகைகள் அழகிகளாக உடை அணிந்து விருது வழங்கும் விழாவை கண்கவர் நிகழ்ச்சியாக மாற்றினர்.

Oppenheimer Won 7 Oscars :

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய சிலியன் மார்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஓப்பன்ஹெய்மர். அணுகுண்டை தயாரித்த ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசி லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகிவிட்டதாக வருந்திய காட்சிகளிலும், உலகமே போகிறது என உணரும் காட்சிகளிலும் சிலியன் மார்பி தனது நடிப்பால் அசத்தினார். அந்த படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் இப்படம் ஆஸ்கார் விருதை (Oppenheimer Won 7 Oscars) வென்றது.

இன்செப்ஷன், டெனட் உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த கிறிஸ்டோபர் நோலன், ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக முதல் முறையாக சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த படத்திற்கான விருதையும் ஓப்பன்ஹெய்மருக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மார்பியும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியரும் பெற்றனர். மேலும், ஓப்பன்ஹைய்மர் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை வழங்கப்பட்டது. ஓப்பன் ஹைய்மர் 13 பிரிவுகளில் 7 விருதுகளை (Oppenheimer Won 7 Oscars) பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply