OPPO A2x வெறும் ரூ.12000 என்ற பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வருகிறது

ஓப்போ நிறுவனத்தின் OPPO A2X என்ற ஸ்மார்ட் போன் தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஓப்போ ஏ2 எக்ஸ் அம்சங்கள்

1. OPPO A2x Display

  • இந்த OPPO A2x ஸ்மார்ட் போனில் 6.56  இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட்டும் உள்ளது. இதனுடன் கூடுதலாக டிசிஐ – பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) வருகிறது. மேலும் இதுவொரு டியர் டிராப் நாட்ச் (Tear Drop Notch) டிஸ்பிளேவாகும்.
  • இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக்  டைமன்சிட்டி 6020 (Octa Core MediaTek Dimensity 6020) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

2. OPPO A2x Camera

  • ஓப்போ ஏ2 எக்ஸ் கலர் ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) மற்றும் மாலி கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் LED பிளாஷ் லைட்டுடன் கூடிய சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) கொண்டுள்ளது. ஆகவே, 30 MB மெயின் கேமரா மற்றும் 15 MB செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த வகையான கேமராவில் போக்கெ, போர்ட்ராய்டு  போன்ற மோட்கள்  உள்ளன.

3. OPPO A2x Storage

  • ஓப்போ ஏ2 எக்ஸ் மாடலில் 8 விர்ச்சுவல் RAM சப்போர்ட்யுடன்  வருகிறது. கூடுதலாக 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (Micro SD Card) சப்போர்ட் இருக்கிறது. இந்த ஓப்போ ஏ2 எக்ஸ் போனுக்கு IP54  தர பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்  கொடுக்கப்பட்டுள்ளது.

  • சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட்  ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) – யும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 6GB RAM  + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB  மெமரி கொண்ட இருவகையான வேரியண்ட்  வருகிறது.

4. OPPO A2x Battery

  • இந்த ஓப்போ ஏ2 எக்ஸ் மாடலில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட  5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி (Type – C) சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த ஸ்மார்ட் போன் பேட்டரியோடு சேர்த்து வெறும் 185 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

5. OPPO A2x Colors

  • இந்த ஓப்போ ஏ2 எக்ஸ் மாடலில் மிட்நைட் பிளாக் (Midnight Black) முகுவாங் கோல்டு (Muguang Gold) மற்றும் ஃபீஷுவாங் பர்பிள் (Feishuang Purple) ஆகிய மூன்று வண்ண கலர்களில்  விற்பனைக்கு வருகிறது.

6. OPPO A2x Rate

  • ஓப்போ ஏ2 எக்ஸ் போனின் 6GB ரேம் + 128GB மெமரி மாடலின் விலை ரூ.12000 ஆகவும், 8GB ரேம் + 256GB மெமரி மாடலின் விலை ரூ.16,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply