Oppo F27 Pro+5G : ஓப்போ F27 Pro+5G ஸ்மார்ட்போன் வெளியீடு

Oppo இந்தியாவில் புதிய Oppo F27 Pro+5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo நிறுவனம் F சீரிஸில், F21, F23 மற்றும் F25 மாடல்களுக்குப் பிறகு F27 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. F27 Pro+ தான் F சீரிஸ் ஸ்மார்ட்போனிலேயே மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியைக் கொண்டுள்ளது. வேறு என்னென்ன வசதிகளுடன் வெளியாகியுள்ளது என்பதை தற்போது காணலாம்.

Oppo F27 Pro+5G ஸ்மார்ட்போன் :

Oppo நிறுவனம் புதிய F27 Pro+ 5G ஸ்மார்ட்போனை நீண்ட காலம் உழைக்கும் வகையில் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை உருவாக்கியுள்ளது. இது இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சம் என்று கூறலாம். உயர்தர டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குகளான IP66, IP68 மற்றும் IP69 ஆகியவற்றை ஒருங்கே பெற்றுருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். அதாவது, இந்த புதிய ஸ்மார்ட்போன் அதிக வெப்பம் மற்றும் உயர் அழுத்த வாட்டர் ஜெட் ஆகிவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது 30 நிமிடம் தண்ணீரில் மூழ்கினாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாம். இந்த IP ரேட்டிங்கை தவிர, 360 டிகிரி ஆர்மர் பாடி பாதுகாப்பு மற்றும் ஸ்கிரீனுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு ஆகிய வசதிகளை Oppo F27 Pro+5G ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Oppo F27 Pro+5G வசதிகள் :

இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது. பின்புறம் 64MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சாரை உள்ளடக்கிய டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த Oppo F27 Pro+5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் 8GB என்ற RAM தேர்வும், 128 GB மற்றும் 256 GB என்ற இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களும் உள்ளன. மேலும், 5000mAH பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Oppo F27 Pro+5G விலை :

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 8GB + 128GB வகையின் விலை ரூ.27,999 மற்றும் 8GB + 256GB வகையின் விலை ரூ.29,999 ஆகும். இரண்டு வகைகளும் டஸ்க் பிங்க் மற்றும் மிட்நைட் நேவி ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை இந்தியா e-ஸ்டோர், அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ Oppo சில்லறை விற்பனைக் கடைகளில் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply