பிரதமர் மோடிக்கு 'Order of Saint Apostle' விருது வழங்கி ரஷ்யா கவுரவித்தது

பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் ரஷ்யாவின் உயரிய விருதினை வழங்கினார்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மாஸ்கோவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார். அதைத் தொடர்ந்து ரஷ்ய நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்பு கம்பள வரவேற்பும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி 22வது இந்திய – ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். இரு தலைவர்களும் குறிப்பாக இரு நாட்டின் அரசியல் சூழல் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்கள். இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில் ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவரான விளாடிமிர் புதின் ரஷ்ய நாட்டின் மிக உயரிய ‘Order of Saint Apostle’ விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்துள்ளார். இந்த விருது ஆனது இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் வழங்கப்பட்டுள்ளது.

'Order of Saint Apostle' விருது பற்றிய குறிப்புகள் :

  • பேரரசர் ஜா பீட்டர் தி கிரேட் 1698-ம் ஆண்டு ‘Order Of Saint Apostle’ விருதை இயேசுவின் முதல் அப்போஸ்தலரும், ரஷ்ய துறவியுமான செயிண்ட் ஆண்ட்ரூவின் நினைவாக அறிமுகம் செய்தார்.
  • 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது நிறுவப்பட்டது.
  • இந்த விருது ரஷ்யாவின் உயரிய விருது ஆகும்.
  • கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த ரஷ்யாவின் உயரிய விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
  • இந்த விருது ரஷ்ய அரச குடும்பத்தின் ஒரு அம்சத்துடன் தொடர்புடையது.
  • ஜார் பீட்டர் தி கிரேட் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கௌரவம் முதன்முதலில் 1698 இல் அந்த நாட்டின் குடிமக்களின் முன்னோடியில்லாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் மோடி ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருதைப் பெற்ற பிறகு தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவிற்கும் -ரஷ்யாவிற்கும் இடையேயான நட்பு மிகவும் முக்கியமானது. அதிபர் புதினின் தலைமையில் கடந்த 25 ஆண்டுகளில் இந்திய – ரஷ்ய உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இந்த விருது 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம் ஆகும். இரு நாட்டு மக்களிடையேயான கூட்டாண்மையை மேலும் ஊக்குவிக்கும். ‘Order Of Saint Apostle’ விருதை பெறுவதில் நான்  பெருமைப்படுகிறேன்” என்று எழுதியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply