பிரேசில் நாட்டில் Oropouche Virus Disease காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

Oropouche Virus Disease :

உலகில் இப்போது பல புதிய வைரஸ் பாதிப்புகள் ஆனது பரவி வருகிறது. பிரேசில் நாட்டில் Oropouche வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை மர்ம நோயாகவே Oropouche வைரஸ் நோய் இருந்து வந்தது. தற்போது இந்த Oropouche Virus Disease ஏற்கனவே பாதிக்கப்பட்ட கொசுக்கள் மற்றும் பூச்சிகள் மூலமாகப் பரவுகிறது என்பது தெரியவந்துள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள ஒரு கிராமத்தில் 1955 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் பாதிப்பு ஆனது Oropouche என்ற ஆற்றுக்கு அருகே முதன் முதலில் கண்டறியப்பட்டதால் இந்த பெயரைப் பெற்றுள்ளது. மேலும் Oropouche வைரஸ் ஆனது Peribunyaviridae குடும்பத்தைச் சேர்ந்த Orthobunyavirus என்ற வைரஸ் வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த Oropouche வைரஸ் பாதிப்பு ஆனது Oropouche என்ற ஆற்றுக்கு அருகே இருந்து வந்த வனப் பாதுகாவலர்களில் ஒருவருக்கே ஏற்பட்டுள்ளது. பிரேசில், பனாமா மற்றும் பெருவில் கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்த Oropouche வைரஸ் திடீரென பரவியது. கடந்த 2000 ஆம் ஆண்டில் கொலம்பியா, டிரினிடாட் நாடுகளில் சில விலங்குகளிடமும் இந்த Oropouche Virus Disease பாதிப்பு  ஆனது கண்டறியப்பட்டது.

இதை டெங்கு சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் அல்லது மலேரியா என்றே மக்கள் பலரும் பல சமயங்களில் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், முழுக்க முழுக்க இது ஒரு தனி வைரஸ் பாதிப்பு ஆகும். இந்த Oropouche வைரஸ் ஒருவரது உடலை தாக்கிய 3 முதல் 10 நாட்களில் 38°C – 40°C திடீர் காய்ச்சல், தலைவலி, குளிர் மற்றும் ஆர்த்ரால்ஜியா ஆகிய அறிகுறிகள் ஆனது தென்படத் தொடங்கும். இந்த Oropouche வைரஸ் அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு மேலாக நீடிக்கும். மேலும் இதன் முக்கிய அறிகுறிகள் ஆனது ஃபோட்டோபோபியா, மயக்கம், ரெட்ரோபிட்டல், கண் வலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆகும். இந்த பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா அளவுக்கு உலகெங்கும் பரவ வாய்ப்புகள் ஆனது குறைவுதான் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பொதுமக்கள் இந்த Oropouche Virus Disease குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply