Osaka Tamil International Film Festival: ஜப்பானிலிருந்து நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் விருது

ஒசாகா தமிழ் சர்வேதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதிற்கு நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட பட உள்ளது.

ஒசாகா திரைப்பட விழா

ஜப்பான் நாட்டில் தமிழ் மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் மற்றும் திரைப் படைப்புகளையும் பொதுமக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். அதைதொடர்ந்து, இரு பகுதி மக்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுவடையச் செய்யும் வகையில் ஒசாகா தமிழ் திரை திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஒசாகா தமிழ் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வருடத்தின் குளிர்கால தொடக்கத்தில் நடைபெறும். அந்த வகையில் தான் நடப்பாண்டு விருத்தாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது

சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.கொரோனா காலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரைக்கு வந்த பெரிய ஹீரோவின் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் என பல முக்கிய முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாககவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் விஜய் நடித்ததற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மற்ற விருதாளர்களின் பட்டியல்

சிறந்த நடிகைக்கான விருது தலைவி படத்திற்காக கங்கனா ரணாவத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும், ஜெய்பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது மணிகண்டனுக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட உள்ளது.

சிறந்த நடன இயக்குனருக்கான விருது மாஸ்டர் மற்றும் வாத்தி படத்தில் பணியாற்றிய தினேஷ் மாஸ்டருக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கர்ணன் படத்தில் பணியாற்றிய தேனி ஈஸ்வருக்கும் வழங்கப்பட உள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது ஜெய்பீம் படத்தில் நடித்த லொஜோமோல் ஜோஸுக்கும், சிறந்த வில்லன் விருதாக மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட உள்ளது. சார்பட்டா படத்தில் பணியாற்றிய த. ராமலிங்கத்திற்கு சிறந்த கலை இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது ரெடின் கிங்ஸ்லிக்கும், குழந்தை நட்சத்திர விருதுக்கு டாக்டர் படத்தில் நடித்த கிங்ஸ்லே மற்றும் சாரா வினீத் ஆகியோர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து விருதுகளை பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply