Overrated Cricketer Shubman Gill : கில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே பிரின்ஸ் அல்லது கிங் என்று அழைக்கப்பட வேண்டும்

Overrated Cricketer Shubman Gill :

கில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே பிரின்ஸ் அல்லது கிங் என்று அழைக்கப்பட வேண்டும் (Overrated Cricketer Shubman Gill) என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். நீ எல்லாம் இளவரசனா? கோலியை பார்த்து கத்துக்கோப்பா.. கில்லை விளாசிய ஸ்ரீகாந்த். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் தொடர்ந்து  படுமோசமாக விளையாடி வருகிறார்கள். கடைசியாக கில் சதம் அடித்து பல டெஸ்டுகள் ஆகிவிட்டது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கில்  இதுவரை மூன்று இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 64 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். இது குறித்து ஸ்ரீகாந்த், “அனைத்து விதமான மைதானங்களிலும்  கில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே பிரின்ஸ் அல்லது கிங் என்று அழைக்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலியை நாம் ஏன் அனைவரும் கிங் என்று கூறுகிறோம் என்றால் அவரது தொடர் சாதனை ஆகும். நாம் அவருடைய சாதனையை எடுத்துப்  பார்த்தால், கடந்த ஆண்டு டெஸ்ட் மேட்ச் ஒருநாள் கிரிக்கெட் டி20 என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக (Overrated Cricketer Shubman Gill) விளையாடியிருக்கிறார். நம்மால் ஒவ்வொரு ஆண்டும் விராட் கோலி போன்ற ஒரு வீரரை உருவாக்குவது என்பது எளிதான காரியம்  அல்ல. கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் முயற்சி செய்து தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டு கோலி போன்ற தகுதியைப் பெற உழைக்க வேண்டும். ஆனால் சில பேர் அவசரப்பட்டு கில் தான் அடுத்த கோலி, அவர்தான் அடுத்த அது  இது என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நாம் அனைவரும் கொஞ்சம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவரை எதற்காக, ஏன் இளவரசர் என்று கூறுகிறார்கள். நான் அப்படி எல்லாம் அவரை மிகைப்படுத்தி கூற மாட்டேன். அதே நேரத்தில் நான் அவரை தாழ்த்தியும் பேச மாட்டேன். ஒரு இரு மிகைப்படுத்த கிரிக்கெட் வீரர்கள் தற்போது தங்களுடைய முழு திறமையை உணர்ந்து விளையாடுவதில்லை.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் தற்போது ஒரு மிகைப்படுத்த அணியாகத்தான் கருதுகிறேன். ஒரு இரண்டு ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் நாம் சிறப்பாக செயல்பட்டோம். வெளிநாடுகளில்  குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் தற்போது நாம் சிறப்பாக செயல்படவில்லை. T20 கிரிக்கெட்டிலும் கூட நாம் மிகைப்படுத்த அணியாகத்தான் இருக்கிறோம். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நாம் சிறப்பாக விளையாடுகிறோம். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நாம் தோற்றத்திற்கு அதிர்ஷ்டம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். நாக் அவுட் போட்டிகளில் சில சமயம் நாம் சரியாக விளையாடுவதில்லை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply