Padi To Thiruninravur Converted 100 Feet Road: பாடி முதல் திருநின்றவூர் வரை 6 வழிச் சாலையாக மாற்றும் திட்டம் 100 அடி அகல சாலையாக மாற்றப்பட்டது

பொதுமக்கள் எதிர்ப்பால் பாடி முதல் திருநின்றவூர் வரை 6 வழிச் சாலையாக மாற்றும் திட்டம் ஆனது 100 அடி அகலம் (Padi To Thiruninravur Converted 100 Feet Road) வரை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுத்தவிர உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. நாள்தோறும் இந்த சென்னை – திருப்பதி NH 716 தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

பாடி முதல் திருநின்றவூர் வரை 100 அடி சாலை (Padi To Thiruninravur Converted 100 Feet Road)

Padi To Thiruninravur Converted 100 Feet Road - Platform Tamil

நெடுஞ்சாலைத்துறை தமிழக பகுதிகளை மூன்றாக பிரித்து சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

● பாடி – திருநின்றவூர்
● திருநின்றவூர் – திருவள்ளூர்
● திருவள்ளூர் – ஆந்திர எல்லைப் பகுதி

இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாடி முதல் திருநின்றவூர் வரை செல்லும் 22 கிலோமீட்டர் தூர 4 வழிச் சாலையை முறையாக பராமரிப்பதில்லை என்ற (Padi To Thiruninravur Converted 100 Feet Road) குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஏனெனில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தன. இந்த இடையூறுகளை அகற்ற கோரிக்கைகள் வலுத்தன. 2013 ஆம் ஆண்டு சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்புக்கு பிறகும் பணிகள் தொடங்கப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இது ஒரு நெருக்கடியாக இருந்தது.

பொதுமக்களும், வியாபாரிகளும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பலகட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. எனவே தற்போது 6 அடி சாலையை 100 அடி அகலத்தில் (Padi To Thiruninravur Converted 100 Feet Road) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுத்தவிர 5 இடங்களில் உயர்நிலை பாலங்கள் அமைக்கவும், மற்றும் 6 இடங்களில் புதிய வழிப் பாதைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நிலம் (Padi To Thiruninravur Converted 100 Feet Road) கையகப்படுத்தும் பணிகளுக்கு 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 915 கோடி ரூபாய் நிதி திருவள்ளூர் – ஆந்திர மாநில எல்லை வரையிலான 44 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest Slideshows

Leave a Reply