Padma Bhushan Award To Captain Vijayakanth : விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது (Padma Bhushan Award To Captain Vijayakanth) அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் பத்மபூஷன் விருது பெற்றதையடுத்து, விஜயகாந்தை அவரது ரசிகர்கள் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த் :

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது சினிமாவில் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவர் செய்தது சாதாரணமான விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை. அதுமட்டுமின்றி விஜயகாந்த் பலருக்கும் உதவி செய்துள்ளார். ரசிகர்களால் கேப்டன், புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பதவிக்கு ஏற்ற பல விஷயங்களை தனியாளாக நிர்வகித்தவர். தனி ஆளாக கூட்டத்தை கட்டுப்படுத்தி, எந்த பிரச்சனை என்றால் யாருக்கும் பயப்படாமல் முதல் ஆளாக போராட்டத்தில் குதிப்பது, நட்சத்திர கலைவிழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.

விஜயகாந்த் மறைவு :

நடிகர் சங்கத் தலைவராக தோன்றிய விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிமுகவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு சில எம்.எல்.ஏக்கள் தேமுதிகவிலிருந்து விலகினர். இதனால் மிகவும் மனமுடைந்த விஜயகாந்த் அன்றிலிருந்து மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுவதுண்டு. மேலும் அந்த நேரத்திலிருந்து தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நிலை சரியில்லாததால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், எப்போதாவது மட்டுமே தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். அவரது மரணம் பல கோடிக்கணக்கான மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலக வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.

Padma Bhushan Award To Captain Vijayakanth - பத்ம பூஷன் விருது :

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் வழங்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது விஜயகாந்துக்கு (Padma Bhushan Award To Captain Vijayakanth) வழங்கப்படவுள்ளது. அதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை (Padma Bhushan Award To Captain Vijayakanth) அடுத்து அவரது ரசிகர்கள் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றனர். முன்னதாக, ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறும் விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும். எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டுக்கான மொத்தம் 132 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply