PAK vs AFG : பாகிஸ்தான் அணி செய்த மாற்றம் | கடைசியில் ரன்கள் குவிப்பு

PAK vs AFG :

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி (PAK vs AFG) விளையாடி வருகிறது. உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி (PAK vs AFG) விளையாடியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆப்கானிஸ்தான் தரப்பில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதனால் ஆட்டம் ஆரம்பம் முதலே பரபரப்பானது.

பாகிஸ்தான் அணி :

PAK vs AFG : இந்நிலையில் பாகிஸ்தான் அணி சார்பில் அப்துல்லா ஷபிக் – இமாம்-உல்-ஹக் கூட்டணி களம் இறங்கியது. சில ஓவர்கள் நிதானம் காட்டிய பின், 5வது ஓவரில், அப்துல்லா சபீக் அபாரமான சிக்சர் அடித்தார். இதன் மூலம் 1,168 பந்துகளுக்குப் பிறகு பவர் பிளே ஓவரில் பாகிஸ்தான் அணி ஒரு சிக்சர் அடித்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், இமாம் உல் ஹக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் – அப்துல்லா சஃபிக் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சரியான நேரத்தில் பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய அப்துல்லா சபிக் 60 பந்துகளில் அதிரடியாக அரை சதம் அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதன்பின், அப்துல்லா சபிக் 58 ரன்களில் நூர் அகமது ஓவரில்  அவுட்டாக, தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

PAK vs AFG : ஷகில் சிறிது நேரத்தில் வந்து 25 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் உடனடியாக இப்திகார் அகமதுவுக்கு பதிலாக ஷதாப் கானை சேர்த்தார். இதன் பிறகு அதிரடியாக ஆடிய பாபர் அசாம் அரைசதம் கடந்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக முன்னேறியது. 40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஆனால் பாபர் அசாம் மீண்டும் அதிரடியாக விளையாடி 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சரியான நேரத்தில் களமிறங்கிய இப்திகார் அகமது, பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 46வது ஓவரில் 13 ரன்களும், 47வது ஓவரில் 16 ரன்களும் சேர்க்கப்பட்டன. 48வது ஓவரில் 13 ரன்களும், 49வது ஓவரில் 16 ரன்களும் எடுக்கப்பட்டன. நவீன் உல் ஹக் கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Latest Slideshows

Leave a Reply