PAK vs NEP Asia Cup 2023 : நேபாள அணியை நொறுக்கி தள்ளியது பாகிஸ்தான்

PAK vs NEP Asia Cup 2023 :

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை (PAK vs NEP Asia Cup 2023 ) எதிர்கொண்டது. இதில் கண்டிப்பாக பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் நம்பர் ஒன் அணியாக வலம் வருகிறது. இவர்களுடன் மிகவும் வலிமை குறைந்த நேபாளம் அணி முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர்.

வலிமை குறைந்த அணியாக எதிர்பார்க்கப்பட்ட நேபால் அணி வெறித்தனமாக பந்துவீசி முதல் இரண்டு விக்கெட்டுகளை விரைவில் சாய்த்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஃபக்கர் சமான் மற்றும் இமாம் உள்ள ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி எழுப்பினர். அடுத்ததாக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஸ்வான் சற்று நேரம் நிதானமாக விளையாடி 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் மற்றும் இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் அணியின் ஸ்கோர்  உயர்ந்து 300ஐ அடைந்தது. குறிப்பாக சிறப்பாக விளையாடிய அணியின் கேப்டன் பாபர் 151 ரன்கள் விளாசினார். மறுமுனையில் வெகுவாக ரன்களை குவித்து வந்த இப்திகார் அகமது வெறும் 71 பந்துகளில் 109 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். இதில் ஆறு பிரம்மாண்டமான சிக்சர்களையும் அடித்து சொந்த நாட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 342 ஆக உயர்ந்தது. இவ்வளவு இமாலய ஸ்கோரை நேபாள அணி எப்படி வெல்லப் போகிறது என்று ஆவலாக இருந்தது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஆசிப் ஷேக் மற்றும் குஷால் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் ரன்களை எடுக்க தடுமாறியை நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கவலைக்கிடத்திற்கு உள்ளானது. ஷாகின் அப்ரிடி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் வெளியேற நேபால் அணி நூறு ரன்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. நேபாளம் அணி தரப்பில் சோம்பால் இவர் மட்டும் 28 ரன்கள் சேர்த்தார். மற்ற அனைவரும் ரன்கள் அடிக்க திணறினர். (PAK vs NEP Asia Cup 2023) இதனால் நேபாள் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் ஷதாப் கான் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Latest Slideshows

Leave a Reply