Pakistan Defeated Sri Lanka: இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது பாகிஸ்தான்...

பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் போராடி  வென்றது.

இலங்கையில் சுற்றுப்பயணம் :

கடந்த சில வருடங்களில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அப்படியே விளையாடினாலும் ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகளை மட்டுமே எதிர்கொள்கிறது‌. கடந்த இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இறுதி போட்டிக்கான வாய்ப்பு கூட பெறவில்லை. அண்மையில் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த அணி கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக வெற்றி பெறவே இல்லை. இந்த நிலையில் இலங்கை நோக்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

கடந்த 16ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் ஆடிய இலங்கை 312 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் டி சில்வா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் மூலமாகவே இவ்வளவு பெரிய ஸ்கோரை அந்த அணி எட்ட முடிந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸ் தொடங்கிய பாகிஸ்தான் அணி அபாரமாக பேட்டிங் செய்து 461 ரன்களை குவித்தது. இதனால் 149 ரன்கள் முதலில் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. இந்த அபாரமான ஸ்கோரை அடித்த பிறகு அதே புத்துணர்ச்சியுடன் பௌலிங் போட சென்றது. அதே உத்வேகத்தில் இலங்கையை 279 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு இலக்கு எளிமையானது. பாகிஸ்தான் அணிக்கு 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. நேற்று ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி சற்று தடுமாறியது. 47 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து சற்று சிக்கலான நிலையில் இருந்தது. தொடர்ந்து கடைசி நாளில் பேட்டிங்கை தொடங்கியது. போட்டி ஆரம்பித்தவுடன் பாபர் ஆசம் விரைவில் வெளியேறினார். இருந்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் மெதுவாக ஆடி ரன்களை சேர்த்தனர். கடைசி வரை களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் அரை சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். கடைசியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

Pakistan Defeated Sri Lanka - பாகிஸ்தான் முன்னிலை

இறுதியாக பாகிஸ்தான் அணி ஒரு வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை ருசித்துள்ளது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply