Pakistan vs Bangladesh Result : முதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான்

Pakistan vs Bangladesh Result - ஆசிய கோப்பை கிரிக்கெட் :

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் (Pakistan vs Bangladesh Result) வெற்றி பெற்றது. லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. வங்கதேசம் அணியின் மூத்த வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் மெஹதி ஹசன் அவுட்டானார். வங்கதேசம் 47 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து, ஐந்தாவது விக்கெட்டுக்கு நட்சத்திர வீரர் ஷகிபுல் ஹசன், முஸ்பிகுர் ரஹீமும் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். ஷகிபுல் ஹசன் 57 பந்துகளில் 53 ரன்களும், முஸ்பிகுர் ரஹீமின் 64 ரன்களும் பெவிலியன் திரும்பினர், வங்கதேசத்தின் சரிவு மீண்டும் தொடங்கியது. 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமாக பந்துவீசியதால் 19 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது.

இதன் மூலம் வங்கதேசம் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஷ் ரவுப் 6 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நசிம் ஷா 3 விக்கெட்டும், அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

பாகிஸ்தான் அணி :

ஃபகார் ஜமான் 20 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இமாம் உல் ஹக்கும், முகமது ரிஸ்வானும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இமாம் உல் ஹக் 84 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் சேர்த்தார், பாகிஸ்தான் 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Pakistan vs Bangladesh Result : இப்போட்டியில் தோல்வியடைந்த பங்களாதேஷ் அணி எதிர்வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று நல்ல ஓட்ட விகிதத்தைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடர்ச்சியான மேலும், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம், இம்முறை பாகிஸ்தானை ஹாட்ரிக் வெற்றி மூலம் வீழ்த்தும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், அதைச் செய்ய முடியாமல் போனது.

இந்த போட்டியுடன் 2023 ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நிறைவடைந்தது. எஞ்சிய அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். சூப்பர் 4 சுற்றின் அடுத்த ஆட்டத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பில் செப்டம்பர் 20 வரை தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

Latest Slideshows

Leave a Reply