Papaya Fruit Benefits : பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Papaya Fruit Benefits

பப்பாளி பழம் சுவையான மற்றும் மனித உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான பழமாகும். இந்த பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பப்பாளி பழத்தை நாம் தினமும் உணவில் பல வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.     

மேலும் பப்பாளி பழத்தில் உடல் எடையை குறைக்கும் திறன், வயது முதிர்வை எதிர்த்துப் போராடுதல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்தல், நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளித்தல், உடலில் ஏற்படும் காயத்தை குணப்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் (Papaya Fruit Benefits) உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பப்பாளி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனால் பப்பாளி பழத்தை (Papaya Fruit Benefits) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை  அதிகரிக்கும். மேலும் வைட்டமின் சி அதிக அளவு உள்ள உணவுகளுடன் ஒரு நாளை தொடங்கினால் தொற்றுநோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பப்பாளி பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். பப்பாளியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் (Heart Disease) அபாயத்தை குறைக்கும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ஏ ஆனது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். நாம் தினமும் வெறும் வயிற்றில் பப்பாளியை (Papaya Fruit Benefits) சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முகத்தில் இருக்கும் முகப்பருவை குறைக்கவும், முதுமையை தடுக்கவும் உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

சமீபத்தில் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் பப்பாளி பழத்தில் (Papaya Fruit Benefits) உள்ள ‘சைமோபபைன்’ என்ற நொதி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த நொதி உடலில் உள்ள புரதங்களை உடைக்க உதவுகிறது. இதன் காரணமாகத்தான் உணவானது எளிதில் செரிக்கப்படுகிறது. மேலும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தான் இந்த ‘சைமோபபைன்’ நொதி திறம்பட செயல்படுகிறது என தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை இழப்புக்கு உதவும்

பப்பாளி பழம் நார்ச்சத்து நிறைந்த பழமாகும். மேலும் உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உங்களை குறைவாக சாப்பிட வைத்து எடையை குறைக்க உதவுகிறது.

Latest Slideshows

Leave a Reply