Paris Olympic 2024 : ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தண்ணீரில் நடைபெறும் தொடக்க விழா

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் (Paris Olympic 2024) வரும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ளது. கடந்த 1924 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவை நடத்த பிரான்ஸ் நாடு தயாராகி வருகிறது. லண்டனுக்கு பிறகு 3-வது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்தும் 2-வது நாடு என்ற பெருமையை பிரான்ஸ் நாடு பெறவுள்ளது.

நிறைவு விழா தேதியில் நடைபெறும் தொடக்க விழா :

கடந்த 1924-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழா நடைபெற்ற ஜூலை 26-ம் தேதியில் Paris Olympic 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. 100 வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக் தொடரை பிரான்ஸ் நடத்துவதால் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தண்ணீரில் நடைபெறும் தொடக்கவிழா :

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த Paris Olympic 2024-ன் தொடக்க விழா தண்ணீரில் நடைபெறுகிறது. புகழ்பெற்ற ஈஃபிள் டவர் அருகில் உள்ள செய்ன் நதியில் (Seine River) தொடக்கவிழா நடைபெறுகிறது. இதற்காக செய்ன் நதியை (Seine River) சுத்தப்படுத்த பிரான்ஸ் அரசு 12,522 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. செய்ன் நதியில் (Seine River) நடைபெறும் இந்த தொடக்க விழாவில் படகில் அந்தந்த நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்த உள்ளனர். இந்தியாவின் சார்பாக தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியகொடியை ஏந்தி இந்திய அணிக்கு தலைமை தாங்குகின்றனர்.

206 நாடுகள் பங்கேற்பு :

இந்த Paris Olympic 2024 தொடரில் 206 நாடுகளில் இருந்து 10,672 வீரர்கள் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். மேலும் 32 வகையான விளையாட்டுகள் மற்றும் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Paris Olympic 2024 - 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை :

பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரை (Paris Olympic) பார்ப்பதற்கு இதுவரை 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர்களை ஒப்பிடும்போது 2 மில்லியன் டிக்கெட்டுகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply