Parthiban's New Film Title Release : நடிகர் பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் இதோ!

Parthiban's New Film Title Release :

நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்னன் பார்த்திபனின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை (Parthiban’s New Film Title Release) பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமான நடிகர்களில் ஒருவர் பார்த்திபன். வித்தியாசமான கதை, புதிய முயற்சி என்பதால் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். அவர் தொடர்ந்து தனது முயற்சிகளை மேம்படுத்துவார். கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரவின் நிழல் படம் வெளியாகியிருந்தது. முழுக்க முழுக்க சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்தது மட்டுமின்றி பார்த்திபனின் முயற்சிக்கு பாராட்டுகளையும் குவித்தது. இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இதையடுத்து தனது அடுத்த படம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த பார்த்திபன் அது தொடர்பான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் பார்த்திபனின் அடுத்த படத்தின் தலைப்பு (Parthiban’s New Film Title Release) வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோவில், “ஒரு திகில் சாகசம்” என்ற அடைமொழி இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோவில் ஆழ் கடல் தொடர்பான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப டைட்டில் வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு “டீன்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு இசைமைப்பாளர் டி.இமான் இசைமைக்கிறார். இப்படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

பார்த்திபனின் மகள் கீர்த்தனா கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றி வருகிறார். மேலும் கவாமிக் ஆரி ஒளிப்பதிவு செய்கிறார், சுதர்சன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தலைப்பு வீடியோ இணையத்தில் (Parthiban’s New Film Title Release) வைரலாகி வருகிறது. இசைத்துறையில் சாதனை படைத்து வரும் லிடியன் நாதஸ்வரம் இந்த ப்ரோமோ வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply