Partner Movie Review : பாட்னர் திரைப்படத்தின் விமர்சனம்...

Partner Movie Review :

மனோஜ் தாமோதரன் இயக்கத்தில், ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வாணி, யோகி பாபு, பாண்டியராஜன், ரவிமரியா, ஜான் விஜய், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பாட்னர் ஆகும். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரியபிரகாஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை (Partner Movie Review) தற்போது பார்க்கலாம்.

படத்தின் மையக்கருத்து :

ஆதியும் யோகிபாபுவும் திருடச் செல்லும் இடத்தில் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அப்போது யோகி பாபு ஹன்சிகாவாக மாறியதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதையாகும்.

இறந்தவரின் டிஎன்ஏ-வை தற்போது உள்ளவர்களின் உடலில் செலுத்தி இறந்தவரின் செயல்பாடுகளை மீட்டெடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதில் பாண்டியராஜன் வெற்றி பெறுகிறார். பாண்டியராஜனின் முன்னாள் மாணவர் ஜான் விஜய் வெளிநாட்டில் இருந்து அவரது கண்டுபிடிப்பை திருட வருகிறார். இதற்கிடையில், ஹீரோ ஆதி தான் வாங்கிய கடனுக்காக தனது தங்கையை ஒரு கந்துவட்டிக்காரருக்கு திருமணம் செய்து வைக்கும் நிலை ஹீரோ ஆதிக்கு வருகிறது. இதனால் பணம் சம்பாதிக்க, யோகி பாபுவுடன் சேர்ந்து திருடுகிறான். இந்நிலையில் இவர்களுக்கு ஜான் விஜய் அசைன்மென்ட் வருகிறது. இதற்காக வாங்கிய ரூ.50 லட்சத்தை அரசியல்வாதி ரவிமரியாவிடம் நான் வந்து கேட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும் என யோகிபாபு கொடுத்து வைக்கிறார். ஆராய்ச்சி மருந்தை எடுக்க பாண்டியராஜன் ஆய்வகத்திற்கு வந்தபோது, ​​​​அந்த மருந்து தவறுதலாக யோகி பாபுவுக்கு செலுத்தப்பட, அவர் ஒரு பெண்ணாக (ஹன்சிகா) மாறுகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் கலவரங்களே இந்தப் படத்தின் கதையாகும்.

திரை விமர்சனம் :

Partner Movie Review : தங்கச்சி சென்டிமென்ட், திருட்டு, அறிவியல் ஆராய்ச்சி என ஆரம்பத்தில் சொன்ன கதையே சூப்பராக இருக்கும் என உட்கார்ந்திருக்கும் ரசிகர்களுக்கு இது காமெடி சீனா? அல்லது சீரியஸ் சீனா? என சிந்திக்க வைக்கும் அளவுக்கு திரைக்கதை மோசமாக உள்ளது. படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். திருடும் போது கூட சீரியஸ் இல்லை. தாங்கள் பார்த்து ரசித்த காட்சிகளை தமிழ் சினிமாவில் இருந்து வரைந்திருக்கிறார்கள். யாரும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. பாடல்கள் படத்திற்கு இடையூறாக இருக்கிறது. ஆங்காங்கே ரோபோ சங்கரின் ஆன்லைன் டயலாக்குகளும், யோகிபாபு ஹன்சிகாவாக மாறி பெண்களைப் பற்றி பேசுவதும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாகக் கையாளப்பட்டாலும் காட்சியமைப்பில் சுவாரஸ்யம் இல்லாதது எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது.

நடிகர்களின் நடிப்பு :

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படம் அவருக்கு கப்பேக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அதேபோல் இடைவேளைக்கு பிறகு வரும் ஹன்சிகா, ஹீரோயினாக வரும் பாலக் லால்வாணி, யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரவிமரியா, முனிஷ்காந்த், தங்கதுரை என பல நட்சத்திரங்கள் இருந்தாலும் இவர்களின் கதாபாத்திரங்கள் எதுவும் பார்வையாளர்களை பெரிதாக கவரவில்லை.

Latest Slideshows

Leave a Reply