Paruthiveeran Censor Certificate : பருத்திவீரன் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது

Paruthiveeran Censor Certificate :

2007ல் வெளியான பார்த்திவீரன் படத்தின் சென்சார் சான்றிதழ் புகைப்படம் வெளியாகி இணையத்தில் (Paruthiveeran Censor Certificate) வைரலாகி வருகிறது.

2007-ம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் தமிழ் சினிமாவில் அப்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த நடிகர் கார்த்தி, இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு திருப்புமுனை தந்த படம் என பல பெருமைகளை கொண்ட படமாக அமைந்தது பருத்திவீரன். இப்படிப்பட்ட ஒரு படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருத்திவீரனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அமீரும், ஞானவேல்ராஜாவும் மாறி மாறி குற்றம் சாட்டினர். இதில் அமீரை திருடன் என ஞானவேல்ராஜா விமர்சித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சசிகுமார், பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுதா கொங்கரா, கவிஞர் சினேகன், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரும் பேசாமல் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. அமீரைப் பற்றிப் பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்தார்.

ஆனால் வருத்தம் தெரிவித்திருக்கக் கூடாது. சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் தரக்குறைவாக விமர்சித்த அதே இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடும் கோபத்தில் கொந்தளித்தனர். இதனிடையே நடிகரும், இயக்குனருமான சேரன் வெளியிட்ட பதிவில், படைப்பாளிகளின் பாவத்தை சுமக்காதீர்கள் அமீரின் நேர்மையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. நான் உங்களை கண்டிக்கிறேன். உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் பார்த்திவீரன் படத்தின் சென்சார் சான்றிதழின் புகைப்படம் (Paruthiveeran Censor Certificate) ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் கீழே படத்தின் தயாரிப்பாளரின் இடத்தில் “அமீர்” பெயர் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் அமீர் என்பது உறுதியாகி விட்டதா, இதற்கு ஞானவேல்ராஜா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேள்வி எழுந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply