Paruthiveeran Issue : ஞானவேல்ராஜாவை விமர்சித்த சமுத்திரக்கனி

பருத்திவீரன் பட பஞ்சாயத்து நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில் ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்டதை விமர்சித்து சமுத்திரக்கனி அறிக்கை (Paruthiveeran Issue) வெளியிட்டுள்ளார். ‘பருத்தி வீரன்’ படம் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே கடந்த சில வாரங்களாக தகராறு (Paruthiveeran Issue) நிலவி வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஞானவேல்ராஜா, இயக்குனர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர், என் காசில் தொழில்லைக் கற்றுக்கொண்டார் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்காரா, பொன்வண்ணன், கவிஞர் சினேகன், இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குனர் சிகரம் பாரதிராஜா என பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

Paruthiveeran Issue - ஞானவேல்ராஜா கேட்ட மன்னிப்பு :

இந்த விவகாரம் வலுவடைந்து வருவதால் நேற்று காலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், பருத்தி வீரன் பிரச்சனை (Paruthiveeran Issue) கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுநாள் வரை நான் அதைப் பற்றி பேசவில்லை. அவரை நான் எப்போதும் அமீர் அண்ணா என்றே அழைப்பேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தேன்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டிகளில் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அவருக்குப் பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவரைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு மனப்பூர்வமாக வருந்துகிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையும், அதில் பணிபுரியும் ஒவ்வொருவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி என்று தெரிவித்திருந்தார்.

சமுத்திரக்கனியின் அறிக்கை :

Paruthiveeran Issue : இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் சமுத்திரக்கனி “பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது. எந்த பொது இடத்தில் எகத்தாளமா உக்காந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால் செற்ற வாரி இரைச்சிங்களோ… அதே பொது வெளியில பகிரங்கமாக மன்னிப்பு கேக்கணும்.. நீங்கள் கொடுத்த அந்த கேவலமான, மோசமான பேட்டியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும்…! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும். ஏன்னா.. கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டும். அப்புறம் “பருத்திவீரன்” படத்தில் பணியாற்றிய பல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இன்னும் சம்பளம் பாக்கி உள்ளது. பாவம்… அவர்களெல்லாம் எளிய குடும்பத்தில் இருந்து வந்து வேலை பாத்தவங்க.. நீங்கதான், அம்பானி பேமலியாச்சே..! என தனது அறிக்கையை தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply