Pasalai Keerai Benefits : பசலைக்கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Pasalai Keerai Benefits : இயற்கை நம் வாழ்வில் பல்வேறு அற்புதங்களை நமக்கு வழங்குகிறது. அவற்றுள் நாம் உண்ணும் உணவுப் பொருட்களும் முக்கியமானவை. அத்தகைய உணவுப் பொருட்களில் ஒன்று பசலைக்கீரை. ஆம், இந்தக் கீரையில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது. அதுமட்டுமல்ல, கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு கீரை மருந்தாகும். இந்தக் கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் ஒரு சிறந்த உணவுப் பொருளாகும். எனவே, அந்த கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தற்போது காணலாம்.

பசலைக்கீரையின் நன்மைகள்

Pasalai Keerai Benefits - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பசலைக் கீரை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் கொண்டுள்ளதால், இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பசலைக் கீரையில் வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் K மற்றும் வைட்டமின் E போன்றவை அதிகம் உள்ளது. இது பல்வேறு நோய் தொற்றுகள், சுவாசப் பிரச்சனைகள், சிறுநீர் பாதை தொற்றுகள் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

Pasalai Keerai Benefits - உடல் எடை குறைக்க

பசலைக் கீரையில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளதால் இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளதால் இது சிறந்த உணவாக கருதப்படுகிறது.

Pasalai Keerai Benefits - நார்ச்சத்து நிறைந்தவை

  • இந்த மூலிகை மலச்சிக்கல், சிறுநீர் தேக்கம், நீரடைப்பு, வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கும் சிறந்த மருத்துவப் பொருளாக இந்த பசலைக்கீரை உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
  • இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.

Pasalai Keerai Benefits - எலும்பு மற்றும் பற்கள் வலுவடைய

  • பசலைக் கீரையில் நிறைந்துள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்த செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் K எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலின் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசலைக் கீரை இருக்கிறது.

Pasalai Keerai Benefits - அழகான சருமத்திற்கு

  • பசலைக் கீரையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தில் எண்ணெயைத் தக்கவைத்து, சரும வறட்சியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, முகப்பரு மற்றும் சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.

Pasalai Keerai Benefits - வயிற்று பிரச்சனையை போக்க

  • பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை உணவின் மூலம் சரி செய்ய வேண்டுமானால், பசலைக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையை தீர்க்கலாம். இது வயிற்றுக் கோளாறுகளையும் போக்கும்.
  • பொதுவாக கீரைகள் குடலில் உள்ள குப்பைகளை வெளியேற்ற உதவும். பசலைக்கீரை உடல் கழிவுகளை வெளியேற்றி வயிற்றை குளிர்விக்கும். வயிற்றுப் புண்களை ஆற்றவும் உதவுகிறது.

Pasalai Keerai Benefits - உடலை குளிர்விக்க

  • கோடைக்காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இந்த பசலைக்கீரை உடல் சூட்டை தணித்து உடல் உபாதைகளை தவிர்க்க உதவுகிறது. பசலைக்கீரை தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் உள்ளது. வெயில் கொப்புளங்கள், வியர்வை பிரச்சனைகள் போன்ற கோடைகால நோய்களுக்கு இந்த கீரை நல்ல மருந்தாக இருந்து உடலை குளிர்விக்கிறது.
  • பசலைக்கீரையை இறைவன் கொடுத்த வரம் என்றுகூட சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான கீரை உடலில் உள்ள பாதி பிரச்சனைகளை சரி செய்யக்கூடியவை ஆகும். மேலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பசலைக்கீரையை கொடுப்பது மிகவும் அவசியமானது ஆகும். இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இதனை சாப்பிட்டால் ரத்தசோகையில் இருந்து விடுபடலாம்.
  • இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கும் இது சிறந்த உணவாகும். குறிப்பாக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பேச ஆரம்பித்தால், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு பல நன்மைகளை கொண்ட பசலைக்கீரையை உட்கொண்டு பயன் பெறுவோம்.

Latest Slideshows

Leave a Reply