Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்

மஃபத் படேல் குஜராத் மாநிலத்தில் மெஹ்சானா என்னும் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஆறு சகோதரர்களுடன் வளர்ந்தவர். 1969-ம் ஆண்டு தனது 23 வயதில் B.E படிப்பை முடித்த மஃபத் படேல் அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைகழகத்தில் MBA படிக்க சென்றார். அவர் அமெரிக்காவில் இந்திய உணவு கிடைக்காமல் அதன் ஏக்கத்தில் தவித்து வந்தார். மஃபத் படேல் தனது MBA படிப்பை முடித்ததும் சிகாகோவிற்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள  இந்தியர்களுக்கு அவர்களுக்கு பிடித்த இந்திய உணவு கிடைக்காமல் தவிப்பதை உணர்ந்தார். நாம் ஏன் இந்தியர்களுக்கான ஒரு மளிகை கடையைத் திறக்கக் கூடாது (Patel Brothers Have Built A Business In USA) என்ற எண்ணம் 1971-ம் ஆண்டு அவருக்கு ஏற்பட்டது.

அதே 1971-ம் ஆண்டு திருவேதி என்ற நண்பர் ஒரு உணவு சம்மந்தமான தொழில் ஐடியாவுடன் மஃபத் படேலை தேடி வந்தார். மஃபத் தன் சகோதரர் துல்சி மற்றும் மனைவி அருணாவின் பண உதவியுடன் அந்த நல்ல வாய்ப்பை ஏற்று செப்டம்பர் 1974-ம் ஆண்டில் 900 சதுர அடி இடத்தில் ஒரு இந்திய மளிகைக் கடையை நிறுவினார். தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (Patel Brothers Have Built A Business In USA) கடையில் தீவிரமாக உழைத்தார். படேல் மீதி இருந்த நேரத்தில் சிறு சிறு வேலைகளையும் செய்து வந்தார்.

Patel Brothers Have Built A Business In USA - Platform Tamil

படேல் சகோதரர்கள் (Patel Brothers Have Built A Business In USA)

முதல் Departmental Stores கடையை சிகாகோவில் டேவோன் அவென்யூவில் தொடங்கிய படேல் அடுத்து Patel Air Tours என்ற ட்ராவல் ஏஜென்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து படேல் இந்திய திருமணங்களுக்கு ஆடைகள் தயாரிக்கும் சாஹில் என்ற (Patel Brothers Have Built A Business In USA) ஆடைகள் பொட்டிக் நிறுவினார். மேலும் அவர் படேல் ஹாண்டிகிராப்ட்ஸ் மற்றும் யுடென்சில்ஸ் மற்றும் படேல் கபே உணவிடம் என்று பலவற்றை நிறுவினார்.

அவர் 90-கள் மத்தியில் நியூயார்க், ஹூஸ்டன், அட்லாண்டா மற்றும் டெட்ராய்ட்டில் தங்களின் பிராண்டை பிரபலமாக்கினார். படேல் பிரதர்ஸ்களின் வாரிசுகள் 1991 முதல் Raja Foods என்ற பெயரில் ரெடிமேட் சப்பாத்தி, பட்டாணி, சமோசா என்று பல இந்திய உணவுவகைகளை அமெரிக்காவில் விற்பனை செய்கிறார்கள். மேலும் ராஜா ஃபுட்ஸ் என்ற பெயரில் சிக்கன் டிக்கா மசாலா, பாலக் பன்னீர் மசாலா, மற்றும் சன்னா மசாலா போன்ற பொருட்களை பேக் செய்து (Patel Brothers Have Built A Business In USA) விற்கிறார்கள். தற்போது படேல் பிரதர்ஸ் குழுமம் டெக்சஸ் முதல் கலிபோர்னியா வரை 51 இடங்களில் தங்களது பிராண்டை நிறுவியுள்ளனர். படேல் சகோதரர்கள் தற்போது 140 மில்லியன் டாலர் சாம்ராஜ்யத்துக்கு சொந்தக்காரர்கள். இன்று தொழிலில் படேல் சகோதரர்கள் கொடி கட்டி பறக்கின்றனர்.

படேல் சகோதரர்கள் மளிகை, உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் விமான சுற்றுலா, துணிக்கடை, கைவினைப் பொருட்கள், ஓட்டல் என பல்வேறு வணிகங்களைச் செய்து வருகின்றனர்.

படேல் சகோதரர்கள் தற்போது இந்திய அமெரிக்க மெடிக்கல் அசோஷியேஷன் உடன் சேர்ந்து NGO மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். இந்தியாவிலும் படேல் சகோதரர்கள் சம்வேதனா பவுண்டேஷன் என்ற அமைப்பை (Patel Brothers Have Built A Business In USA) நிறுவி 160 வீடுகளை இலவசமாக அளித்துள்ளார்கள். குஜராத் நிலநடுக்க பாதிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் ஒரு பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனையையும் நிறுவியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply