Pathan Movie - அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் 2023

Pathan Movie – பாலிவுட்டின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் “பதான்” இதில் பிரபல நடிகர் ஷாருக்கான் கதை நாயகனாக நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

பதான் திரைப்படமானது கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படமாகும். இது பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்சின் 50 வது திரைப்படமாகும். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படமாகும். இந்த படம் முதலில் சர்ச்சையை உருவாக்கியது. பல வழிகளில் கவனம் பெற்ற பதான் திரைப்படம் முன்பதிவில் அதிரடி சாதனை படைத்து வருகிறது. வருகின்ற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு அதிரடியாக தொடங்கி வருகிறது.

டெல்லியில் ஐமேக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் ரூ. 2,200 வரை விற்கப்படுகிறது. மும்பையில் 200 ரூபாய் முதல் தொடங்கி 1450 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மும்பையில் ஒரு சில திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 15 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளனர். ரூபாய்.250 கோடி மதிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் OTT உரிமம் ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட்யை விட அதிக வசூல் செய்தால் மட்டுமே படம் ஹிட் ஆகும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது ஒரு ஆக்சன் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

Leave a Reply

Latest Slideshows