Pathu Thala Audio Launch Date: அடுத்த மாநாட்டுக்கு ரசிகர்களை திரட்டும் சிம்பு
சிம்பு மாநாடு பட வெற்றிக்குப் பிறகு மிகவும் பிஸியாகிவிட்டார். ஏனென்றால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. மேலும் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படமும் நல்ல வசூலை அள்ளியது. சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்துள்ளார். பத்து தல மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் மாநாட்டிற்கு (Pathu Thala Audio Launch) ஏற்பாடு செய்யவுள்ளார் சிம்பு. அதுவும் விஜய்யின் மேடையை விட பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார். அதாவது விஜய்யின் ஆடியோ லான்ச் என்றாலே ரசிகர்களுக்கு விழா கோலம்தான்.
Pathu Thala Audio Launch Date: விஜய் சொல்லும் குட்டிக்கதை கேட்பதற்காகவே ரசிகர்கள் திரண்டு வருவார்கள். விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா மாநாடு போல் நடைபெறும். இறுதியாக, விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார் தில் ராஜு. தற்போது சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா (Pathu Thala Audio Launch Date) மார்ச் 18 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
விஜய் ரசிகர்களை விட அதிக ரசிகர்களை சிம்பு திரட்டப் போகிறார். மேலும் சிம்புவின் விருப்பப்படி இந்த நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ‘சூர்யாவை’ அழைத்துள்ளார். சிம்பு தற்போது மிஸ்கினுக்காக பாங்காக்கில் பயிற்சி எடுத்து வருகிறார். பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக சிம்பு விரைவில் சென்னை வருகிறார். இந்த நிகழ்வில் சிம்பு அரசியல் குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.