Pathu Thala Fans Celebration: வெளியானது சிம்புவின் "பத்து தல" ரசிகர்கள் கொண்டாட்டம்
Pathu Thala Fans Celebration: நடிகர் சிம்பு நடித்த “பத்து தல” நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சென்னை ரோகினி திரையரங்கில் சிம்புவின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
‘பத்து தல’ 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படமான ‘மஃப்டி’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ‘நெடுஞ்சாலை’, சில்லனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்கினார்.
இந்த திரைப்படம் நேற்று வெளியானது. சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கில் காலை 8 மணி முதல் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து ரோகினி தியேட்டரில் டிஜே இசையுடன் நடனமாடி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் சிம்பு ரசிகர்கள்.
மேலும் சிம்பு படத்தை பார்க்க ஹெலிகாப்டர் மூலமாக தான் தியேட்டருக்கு வருவேன் என்று கூறிய நகைச்சுவை நடிகரும் சிம்புவின் தீவிர ரசிகருமான ‘கூல் சுரேஷ்’ பொம்மை ஹெலிகாப்டரை கொண்டு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். முதல் காட்சியைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது என்றும், ரஜினியின் படம் போல் சிம்புவின் பத்து தல இருக்கும் என்றும் கூறினார். மொத்தம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்ட பத்து தல திரைப்படம் ‘CBFC’ இன் ‘U/A’ சான்றிதழை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ஜோ மல்லூரி, கௌதம் வாசுதேவ் மேனன், டி.ஜே. ஆகியோர் நடந்துள்ளதால் படத்தில் எதிர்பார்ப்பு திரையுலக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.