Patta And Chitta Documents : பட்டா மற்றும் சிட்டா ஆவணங்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது

பட்டாவின் பயன்கள் மற்றும் பட்டா ஏன் தேவைப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் பட்டா மற்றும் சிட்டா ஆவணங்கள் (Document) எதற்காக பயன்படுத்தப்படுகிறது (Patta And Chitta Documents) என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நிலத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலைநாட்ட

ஒரு நிலத்தின் மீது உரிமையாளரின் சட்ட பூர்வ உரிமையை நிலைநாட்டுவதற்கு பட்டா மற்றும் சிட்டா முக்கிய ஆவணமாக (Patta And Chitta Documents) பயன்படுத்தப்படுகிறது. இந்த பட்டா மற்றும் சிட்டா ஆவணம் கட்டிடங்கள் போன்ற ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றி அவற்றை சட்ட பூர்வமாக நிரூபிக்க எளிதாக இருக்கும். ஆனால் விவசாய நிலத்தை சட்ட பூர்வமாக நிரூபிக்க முடியாது.

நிலப்பதிவு செய்வதற்காக (Patta And Chitta Documents)

ஒரு காலி இடத்தையோ அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தையோ அல்லது விவசாய நிலத்தையோ வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ பட்டா மற்றும் சிட்டா (Patta And Chitta Documents) ஆவணங்கள் தேவைப்படுகிறது. பட்டா மற்றும் சிட்டா ஆவணத்தை வைத்துதான் ஒரு இடத்தை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். மேலும் தமிழகத்தில் நில உடமைக்கான முக்கிய ஆவணமாக பட்டா மற்றும் சிட்டா உள்ளது.

கடன் மற்றும் இழப்பீடு பெறுவதற்காக

காலியிடமோ அல்லது விவசாய நிலமோ வைத்து இருப்பவர்கள் சொத்தின் மீது வங்கிகளில் கடன் பெறுவதற்கு பட்டா மற்றும் சிட்டா (Patta And Chitta Documents) ஆவணங்கள் தேவைப்படுகிறது. சொத்து அமைந்துள்ள இடம், சொத்தின் அளவு மற்றும் சொத்தின் உரிமை போன்றவற்றை அடிப்படையாக வைத்துதான் கடன் பெரும் தகுதியை வங்கிகள் முடிவு செய்கிறது. விவசாய நிலத்தில் விவசாயம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அரசு நிலத்தினை உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டால் அதற்கான இழப்பீட்டுத்தொகை நிலத்தின் உரிமையாளர் பெறுவதற்கு பட்டா மற்றும் சிட்டா ஆவணங்கள் முக்கியமாக தேவைப்படுகிறது. 

ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்யும் வழி முறைகள்

ஆன்லைனில் பட்டாவை கட்டணம் இல்லாமல் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். மேலும் பட்டா மாற்றுவதற்கு இசேவை மூலம் ரூ.60 செலுத்த வேண்டும். 

  1. ஆன்லைனில் பட்டாவை பதிவிறக்கம் செய்வதற்கு முதலில் அரசு இணையதளமான  https://eservices.tn.gov.in/eservicesnew/home.html- திற்கு செல்ல வேண்டும்.         
  2. பின்னர் அந்த இணையதள பக்கத்தில் உள்ள பட்டா/சிட்டா என்பதை கிளிக் செய்தால் நிலப்பதிவேடு நில உரிமை விவரங்களை பார்வையிடவும் என்ற பக்கம் தோன்றும். 
  3. பின்னர் நில உரிமை விவரங்கள் பக்கத்தில் வட்டம், மாவட்டம் மற்றும் நில வருவாய் கிராமம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவும். பிறகு பட்டா எண் மற்றும் சர்வே நம்பர் மற்றும் உட்பிரிவு போன்றவற்றை உள்ளீடு செய்து சமர்பிக்கவும் பட்டனை அழுத்த வேண்டும்.    
  4. பின்னர் உங்களுக்குரிய பட்டாவின் முழு விவரங்கள் தோன்றும். சேமித்து கொள்ளலாம் அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply