இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோர் - Pepperfry CEO & நிறுவனர் Ashish Shah

Pepperfry CEO & நிறுவனர் :

Pepperfry ஆனது இந்தியாவின் மும்பையை தளமாகக் கொண்ட மிகப்பெரிய Online Furniture Store ஆகும். Ashish Shah (Pepperfry CEO) என்பவரால் Pepperfry ஆனது 2012 இல் நிறுவப்பட்டது. Ashish Shah ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் M.B.A. படித்தவர். இவர் இந்த Online Furniture Store-ரைத் தொடங்குவதற்கு முன், McKinsey & Company, eBay மற்றும் SquareTrade போன்ற முன்னணி நிறுவனங்களில் மூத்த நிர்வாகப் பதவிகளில் பணியாற்றியவர் ஆவார்.

Pepperfry பெயர் காரணம் :

இந்த நிறுவனத்திற்கு பெப்பர்ஃப்ரை என்று பெயரிடப்பட்டதிற்குகான காரணம் ‘Peepal’ என்ற இந்தி வார்த்தைக்கு தமிழில் ‘ஆலமரம்’ என்று பொருள் ஆகும். ஆலமரம் ஆனது எப்போதும் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையின் சின்னம் ஆகும். எனவே இந்த நிறுவனத்திற்கு Pepperfry என்று பெயரிடப்பட்டது.

Pepperfry நிறுவன வளர்ச்சி :

Pepperfry நிறுவனமானது மலிவு விலையில் தரமான மரச்சாமான்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. Pepperfry நிறுவனம் தொடங்கப்பட்ட அந்த நேரத்தில் இந்திய நாட்டில் மிகக் குறைவான E-commerce கடைகள் இருந்தன. ஆனால் Ashish Shah (Pepperfry CEO) தனது திட்டத்தை உறுதியாக நம்பி முயற்சி செய்ய முடிவு செய்தார். அவரின் முக்கிய உத்திகள் மற்றும் தரம் மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துவது ஆகியவை வெற்றி பெற்றது. Pepperfry நிறுவனமானது வெறும் 12 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் 2012 இல் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். Pepperfry நிறுவனமானது  அதன் உற்பத்தி அலகு மற்றும் அதன் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள 5000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து பெறுகிறது.

Pepperfry நிறுவனமானது இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் Offline கடைகளையும் திறந்துள்ளது. இந்தியாவில் Virtual Reality Shopping என்ற கருத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்களில் Pepperfry-யும் ஒன்று ஆகும். Pepperfry நிறுவனமானது படுக்கைகள், சோஃபாக்கள், டைனிங் டேபிள்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குகின்றது. Pepperfry நிறுவனமானது குறுகிய காலத்திற்குள் E-commerce துறையில் முன்னணி வீரராக மாறியுள்ளது. Pepperfry நிறுவனமானது இன்று 1 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய Online Furniture Store ஆகும். 

வீட்டு அலங்காரம், சமையலறைப் பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Pepperfry நிறுவனமானது அதன் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. Pepperfry நிறுவன அனைத்து தயாரிப்புகளும் உயர்தர பொருட்களால் செய்யப்பட்டவை ஆகும். Pepperfry நிறுவன அனைத்து தயாரிப்புகளும் கடுமையான தரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதற்கு பின்னரே வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகின்றன. Pepperfry நிறுவனமானது $500 மில்லியன் மதிப்புள்ள நிறுவனம் ஆகும். Tiger Global Management, Bertelsmann India Investments, மற்றும் Goldman Sachs போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து நிறுவனம் மொத்தம் $244 மில்லியன் பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply