Perarasu About Vijay Political Entry : நான் எப்போதும் விஜய்யின் விசுவாசிதான்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இத்தனை நாட்கள் அமைதி காத்துவந்த அவர், சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கினார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார்.

அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக உரக்கக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய்யோ லியோ படத்தின் வெற்றி சந்திப்பில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன் என்று ஒரு ‘க்’ வைத்து பேசியிருந்தார். அப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என பலரும் உறுதியாக நம்பினர். அதைத்தான் அவர் மறைமுகமாகக் கூறினார்.

தமிழக வெற்றி கழகம் :

தமிழ்நாடு வெற்றி கழகம் : விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது பலருக்கும் தெரியும். கட்சி தொடங்குவதை எப்படி, எங்கு அறிவிப்பார் என்பதுதான் அனைவரின் மனதிலும் இருந்த கேள்வி. கமல்ஹாசன் விஜயகாந்த் போல் பெரிய அரங்கை அமைத்து சொல்லுவார் என நினைக்கப்பட்ட நிலையில், சைலண்ட்  செயலாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, ‘தமிழக வெற்றி கழகம்‘ என்ற கட்சியை தொடங்குவதாகக் கூறினார். அரசியல் கட்சி தொடங்கி அறிக்கை வெளியிட்ட விஜய், மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், “அரசியலின் பேரன்போடு எனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரையுலக நண்பர்கள், தமிழகத்தின் அன்பான தாய்மார்கள், என் இதயத்தில் வாழும் தோழர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்” என்று கூறினார்.

Perarasu About Vijay Political Entry :

இந்நிலையில் விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கி மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் பேரரசு தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு (Perarasu About Vijay Political Entry) பேசுகையில், “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. நடிகர் விஜய் நல்ல தலைவராக வரவேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசிதான். அவர் பெரிய தலைவராக வர வேண்டும்” என்று கூறினார். ஏற்கனவே இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேண்டாம் விஜய் சார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற முதல் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார்” என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply