Pesum Padam Re-Release : 36 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீசாகும் 'பேசும்படம்'
Pesum Padam Re-Release :
கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் கடந்த 1987 ஆம் வெளியான ‘பேசும்படம்’ விரைவில் ரீ ரிலீஸ் (Pesum Padam Re-Release) ஆக உள்ளது.
ரசிகர்களால் கொண்டாடப்படும் பழைய படங்கள் கடந்த சில மாதங்களாக மீண்டும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘பேசும்படம்’ மீண்டும் ரிலீஸ் (Pesum Padam Re-Release) ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘பேசும்படம்’ வெளியானது. இந்த படத்தில் கமல், அமலா, டினு ஆனந்த், சமீர் கக்கார், பிரதாப் மற்றும் பலர் நடித்திருந்தனர். கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக இருந்த சீனிவாச ராவ், வசனமே இல்லாமல் படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தார். அதன் பலனாக திரைக்கு வந்த படம் தான் ‘பேசும் படம்’. இயக்குனர் சீனிவாச ராவ் இரண்டு வாரங்களில் வசனம் இல்லாமல் படத்திற்கு கதையை எழுதினார். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் நிறைவடைந்தது.
படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், கன்னடத்தில் புஷ்ப விமானா, தெலுங்கில் புஷ்பக விமானம், இந்தியில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என பல தலைப்புகளில் படம் வெளியானது. முதல் முயற்சியாக வசனம் இல்லாத இப்படம் நல்ல வசூலை அள்ளியது. பெங்களூரில் 5 மாதங்கள் திரையரங்குகளில் ஓடியது. இப்படத்தில் எல்லா கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்காமல் கதையை நகர்த்திருப்பார் சீனிவாச ராவ். நடுத்தர வாழ்க்கையை சேர்ந்த ஹீரோ விடுதியில் தங்கி தனக்கான வேலையை தேடிக்கொண்டிருப்பர். அப்போது ஒரு நபர் சாலையில் கிடப்பதைப் பார்க்கும் ஹீரோ, அந்த நபரின் உடையில் ஸ்டார் ஹோட்டலின் சாவி இருப்பதை உணர்ந்தார். உடனே அந்த நபரை விடுதியில் உள்ள தனது அறையில் வைத்து பூட்டிவிட்டு பணக்காரனாக ஸ்டார் ஹோட்டலுக்கு செல்கிறார் ஹீரோ. அங்கு அவர் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அவருக்கு ஒரு காதலும் கிடைக்கிறது. இறுதியில் அவரது காதல், சொகுசு வாழ்க்கை என்ன ஆனது என்பதே கதையாகும்.
இப்படத்தில் வசனங்கள் எதுவும் இல்லாததால் நடிகர்களில் நடிப்பு மட்டுமே முக்கியத்துவமாக இருந்தது. நடிகர்களின் நடிப்பு, முகபாவம், உடல்மொழி என அனைத்திலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. கமல் நடிப்பில் அசத்தி இருப்பார். அமலா நடனத்தை பயின்றதால், முகபாவனைகள் மூலம் உணர்ச்சிகளை தானாகவே வெளிப்படுத்துகிறார். கமலுடன் பார்வையிலேயே பேசும் அமலா, ரசிகர்களை கண்ணிமைக்காமல் மகிழ்விப்பார். இருப்பினும், கமல் மற்றும் அமலா காதல் கதையின் சோகமான முடிவு ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தும்.
வசனங்கள் இல்லாமல் படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையில் மேஜிக் செய்திருப்பார். எல்.வைத்தியநாதன். இப்படி வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட பேசும் படம் மீண்டும் ரிலீஸ் (Pesum Padam Re-Release) ஆவதால் கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Latest Slideshows
-
Vijay Tv KPY Bala : 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த குக் வித் கோமாளி பாலா
-
Chandrayaan 3 New Update : உந்து விசைகலனை வெற்றிகரமாக இஸ்ரோ பூமி சுற்றுப் பாதைக்கு திருப்பியுள்ளது
-
தமிழ்நாடு முழுவதும் 47 Automatic Testing Stations அமைக்கப்படும்
-
Hi Nanna Movie Review : 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
MacKenzie Scott : முதல் பணக்காரப் பெண் என்ற அந்தஸ்தை பெறப் போகும் மக்கின்சி
-
இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur தோனியை ஓரங்கட்டினார்
-
Actor Vijay Calls VMI Volunteers : புயலால் அவதிப்படும் மக்களை மீட்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
-
Wikipedia's Most Popular Articles Of 2023 : அதிகம் தேடப்பட்ட மற்றும் படிக்கப்பட்ட கட்டுரைகளை பகிர்ந்துள்ளது
-
Brian Lara : எனது சாதனைகளை இந்திய வீரர் கில் முறியடிப்பார்
-
Ravi Bishnoi : ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் பிஷ்னாய் முதலிடம்