Phil Salt : ஜேசன் ராய்க்கு பதில் சால்ட்டை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா அணி

கொல்கத்தா :

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களால் கடைசி நிமிடத்தில் விலகியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடங்க உள்ளது. 17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணியினரும் பயிற்சி முகாமில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று KKR அணி.

ஜேசன் ராய் :

ஏனெனில் முன்னாள் KKR வீரர் கவுதம் கம்பீர் மீண்டும் ஆலோசகராக கொண்டு வரப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி கடந்த சீசனில் இந்திய இளம் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாமல் KKR அணி விளையாடியது. இம்முறை ஸ்ரேயாஸ் ஐயரும் கம்பேக் கொடுக்கப் போகிறார். இருவரும் இழந்த பெருமையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அணியின் செயல்பாடுகள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதன்படி ஐபிஎல் ஏலத்திலேயே மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இதனால் 2014க்கு பிறகு 10 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை KKR அணி சாம்பியன் பட்டம் வென்று சாதிக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கேகேஆர் அணி சிக்கலில் உள்ளது. KKR இன் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சீசனில் ஷகிப் அல் ஹசனுக்குப் பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். ஜேசன் ராய் 8 போட்டிகளில் 285 ரன்கள் எடுத்ததால் இந்த சீசனில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டது.

Phil Salt :

இதன் விளைவாக, ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் Phil Salt-டை KKR ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய Phil Salt 218 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சமீப காலமாக சால்டினின் ஃபார்ம் உச்சத்தில் இருந்ததால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் KKR அணியின் தொடக்க வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர்கள் ஓப்பனிங் வீரராக களம் இறங்கி அணிக்கு அதிக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply