Pichaikkaran 2 Trailer: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 ட்ரைலர் வெளியீடு
பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் தங்கைக்காக பழிவாங்கும் படலம் மற்றும் விஜய் ஆண்டனியின் அசத்தலான பின்னணி இசை ஆகியவை சுவாரஸ்யமூட்டும் அளவிற்கு வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தை நடிகர் விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ளார்.
பிச்சைக்காரன்
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’ ஆகும். இந்த படத்தில் பகவதி பெருமாள், தீபா ராமானுஜம், மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிப்பு மட்டுமின்றி இந்த படத்தை நடிகர் விஜய் தயாரித்துள்ளார். அம்மா உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படம் தெலுங்கில் ‘பிச்சாகடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் 10 கோடி பட்ஜெட்டில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
Pichaikkaran 2 Trailer
இந்நிலையில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் 2020ல் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தை சசியோ அல்லது வேறு எந்த இயக்குனர்களும் இயக்கப் போவதில்லை என்றும் விஜய் ஆண்டனியே இயக்குவார் என்ற தகவல் வெளியானதுடன் படப்பிடிப்பு தொடங்கி மலேசியாவில் நடத்தப்பட்டு வந்தது. இதில் காவ்யா தாப்பர், யோகிபாபு, மான்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிப்பு, இயக்கம், இசை என பன்முக கலைனராக விஜய் ஆண்டனி உருவெடுத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரில் விஜய் ஆண்டனி பிரபல தொழிலதிபர், குற்றவாளி, பக்திமான், தங்கையை பழிவாங்கும் படலம், விஜய் ஆண்டனியின் அசத்தலான தடதடக்கும் பின்னணி இசை ஆகியவை சுவாரஸ்யமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளாகி அவரது தாடை மற்றும் மூக்கு எலும்புகள் உடைந்து அவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து அவர் விபத்தில் இருந்து மீண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார். தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்து பிச்சைக்காரன் 2 படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்துக்கு தடை கோரி ராஜகணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிச்சைக்காரன் 2 தன் ஆய்வுக்கூட்டம் படத்தின் என்றும் தனக்கு 10 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கூறியிருந்தது.
Pichaikkaran 2 Release Date
படத்தை வெளியிடுவதைத் தடுக்கும் நோக்கத்தில் கடைசிவரை மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் பட வெளியீட்டை தள்ளி வைத்ததால் மன உளைச்சலை ஏற்பட்டதாகவும் விஜய் ஆண்டனி தன் பதில் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வரும் 19ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.