Pig Kidney Transplanted Into A Human : பன்றியின் கிட்னி மனிதனுக்கு பொருத்தப்பட்டது

Pig Kidney Transplanted Into A Human :

அமெரிக்காவில் உள்ள Massachusetts மருத்துவமனையில் ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் அமெரிக்க மருத்துவர்கள் வெற்றி (Pig Kidney Transplanted Into A Human) பெற்றுள்ளனர். இது உலகத்திலேயே முதல்முறை என்ற சாதனையை அமெரிக்க மருத்துவர்கள் படைத்துள்ளனர். உலகில் லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி ஆனது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும் உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்க மருத்துவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து பெற்று கடந்த 16-ம் தேதி நோயாளி ரிச்சர்டு ஸ்லேமனுக்கு பொருத்தினர். இஜெனிசிஸ் நிறுவனம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணுக்களை அகற்றி, மனிதர்களுக்கு பொருந்தக்கூடிய தன்மையை மேம்படுத்தி, சில மனித மரபணுக்களைச் சேர்த்து பன்றியின் மரபணுவில் சில மாற்றங்களை செய்துள்ளது.

மேலும், மனிதர்களை பாதிக்கக்கூடிய வகையில் இருந்த வைரஸ்களையும் செயலிழக்க செய்துள்ளது. இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடந்து வெற்றிகரமாக (Pig Kidney Transplanted Into A Human) நிறைவடைந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக உள்ளதாகவும் மற்றும் கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது நோயாளி குணமடைந்து வருவதாகவும் மற்றும் விரைவில் வீடு திரும்ப போவதாகவும் தெரிவித்தனர். இன்றைய மருத்துவத் உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆனது பரவலாக உள்ளது மற்றும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுநீரக மருத்துவத்தில் நல்ல முன்னேற்றம் ஆனது ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் ஏற்படுள்ள உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் மற்றும் எளிதில் கிடைக்கும் வகையிலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply