Plan Approval Through Online : மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி பெறுவது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது

Plan Approval Through Online :

சென்னை பெருநகர மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி (Plan Approval Through Online) வழங்கும் சேவையை CMDA அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மனைபிரிவுக்கு திட்ட அனுமதி பெற அந்தந்த ஊராட்சிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதியில் உள்ளவர்கள் சிஎம்டிஏவில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்  புதிதாக  மனைபிரிவுக்கு திட்ட அனுமதி பெற விண்ணப்பிப்பவர்கள் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் பூங்காவிற்கு இடம் ஒதுக்க வேண்டும். அரசின் புதிய திட்டங்களை நிறைவேற்ற கட்டிங்கள் கட்ட இடம் ஒதுக்க வேண்டும். அந்த பகுதியின் தன்மையை பொறுத்து சாலையின் அகலம் இவ்வளவு இருக்க வேண்டும் என்று திட்ட அனுமதி வழங்குவார்கள். இந்நிலையில் இணையவழி மூலம் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி (Plan Approval Through Online) பெறுவது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ‘சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்’ அலுவலகத்தில் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை, இணையவழி திட்ட அனுமதி பயிற்சி (Plan Approval Through Online) காணொலி ஆகியவற்றை சிஎம்டிஏ அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான  திரு.பி.கே.சேகர்பாபு  தொடங்கி வைத்தார்.

மேலும் 12 துறைகளின் ஒருங்கிணைந்த தடையில்லா சான்றிதழ் மற்றும் வீடு, மனை வாங்குவோருக்கான விழிப்புணர்வு குறித்த சித்திர கதைகள்  கையேட்டையும் அவர் வெளியிட்டார். அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல் இணையவழி மூலம் பெறப்படும். பிறகு அதனை பரிசீலனை செய்து திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த  இணையவழி திட்ட அனுமதி மென்பொருளை 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் உருவாக்கி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். ஆன்லைன் மூலம் கட்டிட கட்ட அனுமதி வழங்குவதையும் செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆன்லைன் தளத்தையும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குனரகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியவற்றையும் இதனுடன்  இணைத்துள்ளோம்.

மேலும் கூடுதலாக பொதுப்பணித்துறை, சென்னை மெட்ரோ ரெயில் உள்ளிட்ட 12 துறைகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் மூலம் அதனை விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்தும் ஆன்லைன் (Plan Approval Through Online) மூலம் மட்டுமே செயல்படும். அதற்கான அனைத்து முயற்சிகளும்  மேற்கொள்ளப்படுகிறது இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply