Planet Parade 2024 : ஜூன் 3 ல் வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்

சூரியக் குடும்பத்தை சேர்ந்த 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் ஒரு அரிய நிகழ்வு வரும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் (Planet Parade 2024) நிகழவுள்ளது. சூரியக் குடும்பத்தின் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது, ​​அவற்றில் சிலவற்றை வெறுங்கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Planet Parade 2024 - ஒரே நேர்கோட்டில் வரும் 6 கோள்கள் :

பூமி உட்பட 8 கோள்களை உள்ளடக்கிய நமது சூரியக்குடும்பம், இன்னும் நாம் முழுமையாக புரிந்து கொள்ளாத இயற்கையின் வினோதமாக உள்ளது. நம்மை வியக்க வைக்கும் பல அரிய நிகழ்வுகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி சனி, நெப்டியூன், வியாழன், யுரேனஸ், புதன் ஆகிய கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இது ஒரு அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மனித குலத்தை மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் மிக அபூர்வ நிகழ்வு வரும் ஜூன் 3-ம் தேதி வானில் நடக்க உள்ளது. இது கோள்களின் அணிவகுப்பு (Planet Parade 2024) என்றும் வர்ணிக்கப்படுகிறது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலில், “புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரப்போகிறது. இந்த நிகழ்வை நோக்கிய பயணம் ஏற்கனவே துவங்கிவிட்டதால், ஜூன் 3ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இந்த 6 கோள்களில் புதன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். மீதமுள்ள 2 கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்க முடியும். பூங்கா மற்றும் கடற்கரை போன்ற பகுதிகளில் இருந்து இதனை பார்க்க முடியும். ஜூன் 3-ம் தேதி சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த கண்கொள்ளா காட்சியை வானத்தில் தெளிவாக பார்க்கலாம். அதே நேரம், இது தேய்பிறை என்பதால் போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், வெறுங்கண்களால் கோள்களை பார்ப்பது என்பது சிரமமாக இருக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply