PM Kissan Yojana-வின் முக்கிய அறிவிப்பு ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் (PM Kissan Yojana) :
அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் (பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா – PM Kissan Yojana) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி ஆனது செய்யப்பட்டு வருகின்றது. இந்த பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தின் மூலம் ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் ஆனது பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகின்றது.
இதன் மூலம் நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் (PM Kissan Yojana) ஆனது வழங்கப்பட்டுள்ளன. 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் இதன் மூலம் நாடு முழுவதும் பயனடைந்துள்ளனர். மொத்தமாக இவர்கள் மட்டும் ரூ.53,600 கோடி நிதியை பெற்றுள்ளனர். 15 தவணைகளாக இந்த நிதியுதவியை பெற்று தற்போது 16வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் மிக முக்கிய அறிவிப்பு :
மத்திய அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த 2024 வருடத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், மேலும் வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக இது உயர்த்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த 2024 வருடத்தில் 16வது தவணையை பெற வேண்டுமானால், பி.எம்.கிசான் வெப்சைட்டில் (PM Kissan Yojana) விவசாயிகள் தங்களது ஆதார் நம்பரை உறுதி செய்ய வேண்டும். அப்படி உறுதி செய்த விவசாயிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியாக அறிவித்திருக்கிறது. வருகிற 31.01.2024-ல் இதற்கான கடைசி தேதி ஆகும். அதனால், தகுதியுள்ள விவசாய மக்கள் உடனடியாக ஆதாரை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள். இதை பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
பிஎம் கிசான் திட்டத்தில் பலனடையும் விவசாயிகள் ஆதார் நம்பரை உறுதி செய்து கொள்ள வேண்டும் :
பிஎம் கிசான் (PM Kissan Yojana) திட்டத்தில் பலனடையும் விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, ஆதார் நம்பரை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ள வேண்டும். அருகிலுள்ள பொது சேவை மையத்தில் விவசாயிகள் தங்களுடைய பெயரை பிஎம் கிசான் இணைய தளத்தில் e-KYC செய்ய வேண்டும். அப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி வைத்து, பிஎம் கிசான் வெப்சைட்டில் பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும் அல்லது விவசாயிகள் பொது சேவை மையத்தில் உள்ள கருவியில், தங்கள் விரல் ரேகையை வைத்து பிஎம் கிசான் வெப்சைட்டில் ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும் அல்லது விவசாயிகள் தங்களது போனிலேயே ஆன்லைனில், http://pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, ஆதார் e-KYC என்ற பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான (PM Kissan Yojana) கூடுதல் விவரம் ஏதாவது விவசாயிகள் அறிய விரும்பினால் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?