PM Modi Congratulated Manu Bhaker : ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கரை வாழ்த்திய பிரதமர் மோடி

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக் தொடர் 2024-ல் பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டி நடந்தது. இதில் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையைப் பெற்று தந்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான மனு பாக்கர் கதையை பார்க்கலாம்.

மனு பாக்கர் :

நம் அனைவருக்கும் 22 வயது மனு பாக்கரின் வெற்றி முகம் மட்டுமே தெரியவரும். ஆனால் 16 வயதில் சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்தை ருசித்த மனுவுக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வசப்பட்டது. 17 வயதில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.18 வயதில் உலகக்கோப்பையில் 7 தங்கப்பதக்கங்கள், 19 வயதில் துப்பாக்கிச் சுடுதலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை. இப்படி துப்பாக்கியைத் தொட்டது முதலே வெற்றிகளை குவித்தவர் மனு பாக்கர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வி :

பல வெற்றிகளும், பதக்கங்களும் அளித்த தன்னம்பிக்கையுடன் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை எதிர்கொண்டிருந்தார் மனு பாக்கர். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் 3 பிரிவுகளில் எதிர்கொண்ட போட்டிகளில் மனுவுக்கு தோல்விகளே கிடைத்தன. அதுவரை வெற்றிகளையே மட்டுமே ருசித்துக் கொண்டிருந்த மனு பாக்கர் டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்த தோல்வி மனம் உடைய வைத்தது. மொத்தமாக நொறுங்கிப் போனார் மனு. அதன் பின்னர் மன மாற்றத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் பயிற்சியை  தொடங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் தங்கத்தை தட்டிச்சென்ற மனு தனது தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் மீட்டெடுத்தார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மகளிர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ள மனு பாக்கர் கலப்பு இரட்டையர் பிரிவிலும் பதக்கத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடையே நிலவி வருகிறது.

PM Modi Congratulated Manu Bhaker :

பிரதமர் மோடி அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் “இது வரலாற்றுப் பதக்கம். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக வாழ்த்துகள் மனு பாக்கர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்காக  பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால் இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது” என (PM Modi Congratulated Manu Bhaker) தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply