PM Modi Inaugurate New Parliament: புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா…செங்கோலை நிறுவிய மோடி

டெல்லியில் 970 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று காலை திறந்து வைத்தார். காலை 7.30 மணிக்கு ஆரம்பமான தொடக்க விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, கிறிஸ்துவம், இஸ்லாம், புத்த மதம் உள்ளிட்ட சர்வமத பிரார்த்தனைகள் நடைபெற்றன.

செங்கோலை நிறுவிய மோடி

இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல் பிரதமர் மோடியால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோலை உருவாக்கிய ஆந்திராவைச் சேர்ந்த 97 வயது பொற்கொல்லர் உம்மிடி எத்திராஜலு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். பார்லிமென்ட் திறப்பு விழாவில் அவர் கவுரவிக்கப்பட்டார். செங்கோல் பற்றி அவர் கூறும் அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

இந்த செங்கோல் உம்மிடி பங்காரு நகைக்கடைக்காரர்களால் உருவாக்கப்பட்டது. உம்மிடி சுதாகர், உம்மிடி எத்திராஜலு மற்றும் பலர் தங்கள் இளம் பருவத்தில் இந்த செங்கோலை ஒரு மாத காலத்தில் உருவாக்கினர். சுதந்திரத்தின் அடையாளமாக, ஆதீனங்கள் பிரதமர் நேருவிடம் செங்கோலை ஒப்படைத்தனர். செங்கோல் வெள்ளியால் ஆனது, அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டது.1947ல் 15 ஆயிரம் ரூபாய் செலவில் செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக இந்த செங்கோல் எங்கு வைக்கப்பட்டது என்று தெரியாத நிலையில், தற்போது புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் வைத்து பிரதமர் மோடி கவுரவித்துள்ளார். இது தங்களின் உழைப்புக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்று கூறினார்.

மலர் தூவி மோடி வழிபாடு

சாவர்க்கர் படத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி செய்தார். சாவர்க்கரின் பிறந்தநாளான நேற்று அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பலர் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினர்.

விழாவின் - இரண்டாம் கட்ட நிகழ்வு

நண்பகல் 12 மணியளவில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் இரண்டாம் கட்ட விழா தொடங்கியது. மக்களவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சிறப்புப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜெகதீஷ் தங்கரின் உரையை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார். இதில், துணைத் தலைவர் அவர்கள், “இந்த நாள் ஒரு முக்கிய மைல் கல்லாகும். இது நல்ல காலத்தில் உத்வேகத்தின் தொடக்கமாக இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் புதிய நவீன பாராளுமன்ற கட்டிடம் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறியிருந்தார்.

செங்கோலின் பெருமையை உரைத்த மோடி

பின்னர் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை குறிப்பிடும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டார். அதன்பின் உரையாற்றியா பிரதமர் மோடி . “ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்தமே 28 அத்தகைய நாள். புதிய பாராளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல. இது இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் ஆசையின் சின்னமாகும். இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த உலகிற்கான தகவலாக இது அளிக்கிறது. நாடாளுமன்ற கட்டிடம் இது சுதந்திர இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாக இருக்கும்.

புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்திற்குள் இன்று நிறுவப்பட்டுள்ளது. சோழ அரசில் இந்த செங்கோல் நீதி, நேர்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை அடையாளப்படுத்தும் ஒன்றாக விளங்கியுள்ளது. அத்தகைய புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இந்த அவையில் அலுவல்கள் தொடங்கும் போதெல்லாம் செங்கோல் நமக்கு உத்வேகம் தரும். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply