PM Modi Inaugurates Kalpakkam Project : கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

PM Modi Inaugurates Kalpakkam Project :

ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை (நேற்று) தமிழகம் வந்த பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை திட்டத்தை (PM Modi Inaugurates Kalpakkam Project) தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி மகாராஷ்டிராவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சென்றார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாவனி என்கிற 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2003-ஆம் ஆண்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். முதல்கட்டமாக இன்று எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி (PM Modi Inaugurates Kalpakkam Project) தொடங்கி வைத்தார். முன்னதாக, கல்பாக்கம் வந்த பிரதமர் மோடி, பாவனி விரைவு அணுஉலை திட்டத்தின் பயன்பாடு மற்றும் செயல்படுத்துவது குறித்து அங்குள்ள விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார். இத்திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக கல்பாக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பிய பிரதமர் மோடி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜக பேரணியில் பங்கேற்றார்.

கல்பாக்கம் வந்தடைந்த பிரதமர் மோடி, பிறகு அங்கிருந்து நந்தனம் ஒய்எம்ஏ மைதானத்தை பார்வையிட்டார். அப்போது, பிரதமருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் 15,000 போலீசார் மற்றும் 5 அடுக்கு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை தமிழகம் வந்தார். இரண்டு நாள் பயணமாக, மூன்றாவது முறை கடந்த 27ம் தேதி தமிழகம் வந்தார். அந்த நேரத்தில் பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்று இறுதியாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்நிலையில், இந்த ஆண்டில் 4வது முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply