PM Modi Inaugurates New Pamban Railway Bridge : புதிய பாம்பன் இரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பாம்பன் – மண்டபம் இடையே ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு இரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்து நாட்டுக்கு (PM Modi Inaugurates New Pamban Railway Bridge) அர்ப்பணித்தார். இந்தியாவுடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபம் கடற்கரையிலிருந்து, பாம்பன் கடற்கரை வரை கடலில் இரயில் பாலமும் அதன் நடுவே கப்பல் போக்குவரத்து நடைபெற தூக்குப் பாலமும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 24.02.1914-ல் திறக்கப்பட்டது. இந்த பாலம்தான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் நீளமான கடல் பாலம் ஆகும்.

தூக்குப் பாலத்தில் தொழில்நுட்பப் பிரச்சனை

பாம்பன் இரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனைகள் மற்றும் விரிசல் காரணமாக இந்த பாலத்தின் அருகிலேயே புதிய இரயில் பாலம் கட்டும் பணிளுக்கு 2019 ஆண்டு இரயில்வே மானியக் கோரிக்கைகளின் (PM Modi Inaugurates New Pamban Railway Bridge) போது ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1.03.2019-ல் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். பின்னர் 11.08.2019-ல் பாம்பனில் புதிய இரயில்வே பாலம் கட்டுவதற்காகப் பணிகள் துவங்கின.

5 ஆண்டுகள் நடந்த பணி

இரயில்வே நிர்வாகம் 2021-ம் ஆண்டுக்குள் புதிய பாம்பன் இரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால் பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் மற்றும் புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் மற்றும் கொரோனா (PM Modi Inaugurates New Pamban Railway Bridge) பரவலால் நிர்ணயிக்கப்பட்ட பணிகளை முடிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2024-ல் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.

இரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி (PM Modi Inaugurates New Pamban Railway Bridge)

PM Modi Inaugurates New Pamban Railway Bridge - Platform Tamil

இராமநவமியான இன்று பகல் 12 மணியளவில் இலங்கை சுற்று பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த பிரதமர் ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் இரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு (PM Modi Inaugurates New Pamban Railway Bridge) அர்ப்பணித்தார். பின்னர் ரிமோட் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்கு பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படையின் கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய பாம்பன் இரயில் பாலத்தின் சிறப்பு

  • ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டில் இரயில் பாலம் கட்டப்பட்டது.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் பாலம்.
  • ஒரு நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் பாலம் அதன் உறுதித்தன்மையை இழந்ததால் புதிய பாலம்.
  • 2.08 கி.மீ நீளம், கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.
  • இந்த பாலத்தில் 333 கான்கிரீட் அடித்தளம், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள், 72.5மீ. லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
  • புதிய பாம்பன் பாலத்தின் நடுப்பகுதி 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • புதிய பாம்பன் பாலம் நீடித்த ஆயுள், குறைந்த பராமரிப்புத் தேவைகளை கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை இரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply