PM Modi Inaugurates Sela Tunnel : பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசத்தில் Sela Tunnel-ஐ 09.03.2024 அன்று திறந்து வைத்தார்

PM Modi Inaugurates Sela Tunnel

பிரதமர் நரேந்திர மோடி 09.03.2024 அன்று சேலா சுரங்கப் பாதையை (PM Modi Inaugurates Sela Tunnel) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், சீன எல்லை அருகே ‘சேலா சுரங்கப்பாதை’ பகுதியில் உலகத்தின் மிக உயரமான இருவழி சுரங்கப் பாதை ஆனது அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கை இணைக்கிறது. இந்த சுரங்கப்பாதைக்கு மோடி கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

சீனா ஆனது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக இந்தியா அருணாச்சல மாநிலத்தில் தனது ராணுவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகின்றது. இந்தியாவின் ராணுவ பிராந்திய தலைமை அலுவலகம் அசாமின் தேஜ்பூரில் அமைந்துள்ளது. அசாமின் தேஜ்பூரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலை மிகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 மாதங்கள் தவாங் பகுதியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக அந்தப் பகுதியில் சாலை போக்குவரத்து  ஆனது 5 மாதங்கள் துண்டிக்கப்படும்.

'சேலா சுரங்கப்பாதை' சிறப்புக்கள்

இதற்கு தீர்வு காண பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசத்தின் தவாங், மேற்கு காமெங் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சீன எல்லையை ஒட்டிய ‘சேலா பாஸ்’ பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க கடந்த 2019 பிப்ரவரி 9-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அந்த பகுதியில் 13,000 அடி உயரத்தில் மலையைக் குடைந்து உலகின் மிக உயரமான இருவழி சுரங்கப் பாதை ஆனது அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு சுரங்கப் பாதையின் நீளம் 1,595 மீட்டர் மற்றும் மற்றொரு சுரங்கப் பாதையின் நீளம் 1,003 மீட்டர் ஆகும். இந்த இரு சுரங்கப் பாதைகளையும் இணைக்கும் வகையில் 1,200 மீட்டர் நீளமுடைய இணைப்பு சாலையும் மற்றும் அவசர காலங்களில் வெளியேறுவதற்கான பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சுரங்கப் பாதையை ரூ.825 கோடி செலவில் எல்லை சாலைகள் அமைப்பு ஆனது கட்டி முடித்துள்ளது. ஒரு நாளில் சுமார் 3,000 கார்கள் மற்றும் 2,000 லாரிகள் இந்த சுரங்கப் பாதை வழியாக கடந்து செல்ல முடியும். குறிப்பாக சீன எல்லைப் பகுதிக்கு பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ வாகனங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும். இதனால் பனிப்பொழிவு காலங்களிலும் ராணுவ வீரர்களால் சீன எல்லைப் பகுதிக்கு தடையின்றி செல்ல முடியும். இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் – அசாமின் தேஜ்பூர் இடையிலான தொலைவு 10 கி.மீ. ஆகவும், மற்றும் பயண நேரம் ஒரு மணி வரையும் குறைந்திருக்கிறது.

ராணுவம் மட்டுமன்றி சேலா சுரங்கப் பாதையில் உள்ளூர் மக்களும் பெரிதும் பயன் அடைவர் மற்றும் சுற்றுலா துறையும் வளர்ச்சி அடையும் என்று அருணாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 1962 போரில் 300 சீன வீரர்களை கொன்ற சேலா, நூரா ஆகிய இரு இளம்பழங்குடி பெண்களில் நினைவாக சீன எல்லையை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதி ‘நூரா போஸ்ட்’ என்றும், அதற்கு அடுத்த பகுதி ‘சேலா பாஸ்’ என்றும் பெயரிடப்பட்டன. தற்போது சேலா பாஸ் பகுதியில் புதிதாக சுரங்கப் பாதை கட்டப்பட்டு ‘சேலா’ சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டு  சீனாவுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி  ரூ.10,000 கோடி மதிப்பிலான விண்வெளி பயணம் தெடர்பாக UNNATI திட்டத்தையும் , மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கான ரூ.55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி (PM Modi Inaugurates Sela Tunnel) வைத்தார்.

Latest Slideshows

Leave a Reply