PM Modi Meets Praggnanandhaa : பிரதமர் மோடி - செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு...

FIDE World Cup :

பிரதமர் நரேந்திர மோடியை FIDE உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா 31.08.2023 வியாழக்கிழமை (PM Modi Meets Praggnanandhaa) சந்தித்தார்.

அஜர்பெஜானில் உள்ள பாகுவில் நடந்த FIDE செஸ் உலகக் கோப்பையில் வரலாறு படைத்த பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றவர்.

செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (PM Modi Meets Praggnanandhaa) சந்தித்தனர்.

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் டெல்லி விஜயம் :

செஸ் வீரர் பிரக்ஞானந்தா 30.08.2023 புதன்கிழமை அன்று இந்தியா வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

30.08.2023 புதன்கிழமை அன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பிரக்ஞானந்தா சென்னையில் சந்தித்தார். தமிழக அரசு அவரது வெற்றியை சிறப்பாக அங்கீகரித்து ரூ.30,00,000 /- இக்கான காசோலை வழங்கியது.

செஸ் வீரர் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வெற்றி மகிழ்ச்சியை  வெளிப்படுத்த டெல்லிக்கு சென்றார்.

பிரதமர் நரேந்திரமோடி அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (PM Modi Meets Praggnanandhaa) சந்தித்து வெள்ளிப் பதக்கத்தை பிரதமர் நரேந்திரமோடிக்குக் காட்டி, மறக்கமுடியாத சந்திப்பில் சில படங்களைக் கிளிக் செய்தார்.

PM Modi Meets Praggnanandhaa - பிரக்ஞானந்தா சமூக ஊடக தளமான X இல் பதிவு :

அந்த சந்திப்புக்குப் பிறகு, அவர் தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் மோடி தன்னுடைய வெற்றி பதக்கத்தை பார்ப்பதையும், தனது பெற்றோருடன் அரட்டை அடிப்பதுமாக உள்ள சில படங்களைப் பகிர்ந்து ட்விட் செய்துள்ளார்.

“மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை நானும் எனது பெற்றோரும் அவரது இல்லத்தில் சந்தித்தது ஒரு பெரிய மரியாதை! எனக்கும் எனது பெற்றோருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தந்த அனைத்து ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி ஐயா” என்று ஆர்.பிரக்ஞானந்தா தனது ட்விட்டர் பதிவில் செய்தார்.

பிரக்ஞானந்தாவின் ட்விட்டர் பதிவிற்கு, “31.08.2023 அன்று 7 PM மணிக்கு எனது இல்லத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பார்வையாளர்கள் இருந்தனர். உங்களை, உங்கள் குடும்பத்தினருடன் சந்திப்பதில் மகிழ்ச்சி @rpragchess. நீங்கள் உங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் வெல்ல முடியும் என்பதற்கு உங்கள் வெற்றி உதாரணம் காட்டுகிறது. உங்களது வெற்றியை பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று மோடி பதிவு செய்தார். உங்களது வெற்றி இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் வெல்ல முடியும் என்பதற்கு ஓர் உதாரணம்.

Latest Slideshows

Leave a Reply