PM Modi Reduced LPG Cylinder Price : மகளிர் தின பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு

PM Modi Reduced LPG Cylinder Price :

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சிறப்பு பரிசாக பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்பை (PM Modi Reduced LPG Cylinder Price) அறிவித்துள்ளார். அதன்படி மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த நாளை மேலும் சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மகளிர் தின சிறப்பு அறிவிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் (PM Modi Reduced LPG Cylinder Price)  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் இணையதளத்தில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சிலிண்டர் விலை குறைப்பால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாக குறைக்கும். மிகவும் மலிவு விலையில் சமையல் எரிவாயுவை வழங்குவதன் மூலம், குடும்பங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்ய முடியும். மேலும் இந்த அறிவிப்பு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்கள் எளிதான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்யும் பாஜகவின் கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் வீட்டு சிலிண்டர் விலை ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பின் மூலம் சிலிண்டர் ரூ.818.50க்கு வழங்கப்படும். இந்த விலை குறைப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை (PM Modi Reduced LPG Cylinder Price) பெற்றுள்ளது. மறுபுறம், தேர்தலை மனதில் வைத்து பாஜக புதுமையான விலை குறைப்பை அமல்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு, வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Latest Slideshows

Leave a Reply