PM Modi Visit Kuwait : பிரதமர் மோடி 43 ஆண்டுகளுக்கு பிறகு குவைத் செல்கிறார்

பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளில் குவைத் செல்லும் முதல் இந்திய பிரதமர் (PM Modi Visit Kuwait) என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

பிரதமர் மோடி குவைத் பயணம் (PM Modi Visit Kuwait)

பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் வளைகுடா நாட்டிற்குச் செல்வது இதுவே முதல் (PM Modi Visit Kuwait) முறையாகும். குவைத்தின் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 

குவைத்தில் மோடியின் நிகழ்ச்சி நிரல்

பிரதமர் மோடி அவர்களுக்கு குவைத் மாளிகையில் தங்கவைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்படவுள்ளன. குவைத் தலைமையுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதோடு, குவைத்தின் பட்டத்து இளவரசரையும் தனித்தனியாக சந்திக்கவுள்ளார். அவர் குவைத் பிரதமருடன் பேச்சுவார்த்தை (PM Modi Visit Kuwait) நடத்துவார். பட்டத்து இளவரசர் அளிக்கும் விருந்துகளிலும் பங்கேற்கிறார். அவர் ஒரு சமூக நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடவும், தொழிலாளர் முகாமுக்குச் செல்லவும் குவைத் அமீர் சிறப்பு விருந்தினராக 26-வது அரேபிய வளைகுடா கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்தவும், ஆழப்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

குவைத் இந்தியா உறவு

பிரதமர் மோடியின் முக்கியத்துவத்தை குவைத் நாட்டின் தூதர் எடுத்துக்கூறியுள்ளார். அவர் கூறியதாவது 43 ஆண்டுகளில் குவைத் செல்லும் இந்திய பிரதமர் ஆவார். பிரதமர் மோடி செல்லாத ஒரே வளைகுடா குவைத் மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதல் உயர்மட்டச் சந்திப்பு இதுவாகும். குவைத்தின் சிறந்த நண்பராக இந்தியா உள்ளது. இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு 2 பில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும் “மேக் இன் இந்தியா” தயாரிப்புகளின் வரத்து அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply