PM Vidyalaxmi Scheme : முழு கல்விக் கட்டண கடனுதவி

November 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை PM Vidyalaxmi Scheme திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணம் மற்றும் பாடநெறி தொடர்பான பிற செலவுகளை உள்ளடக்கும் வகையில் ரூபாய் 7.5 லட்சம் வரை கடனுதவி அளிக்கும் PM Vidyalaxmi திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த PM Vidyalaxmi Scheme ஆனது தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் ஒரு பகுதியாக உள்ளது. மத்திய அரசு ஆனது ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு 75 சதவீத கடன் உத்தரவாதத்தை வழங்கும். 2024-25 முதல் 2030-31 வரை இத்திட்டத்திற்கு ரூ.3,600 கோடி கிடைக்கும்.

PM Vidyalaxmi திட்டம்

உயர்கல்வி படிக்கும் தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்த PM Vidyalaxmi Scheme திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று தங்களது  உயர்கல்வியை தொடரலாம். மாணவ, மாணவிகள் அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் வரை கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும். 3 விழுக்காடு வட்டிச் சலுகை ஆனது ரூபாய் 10 லட்சம் ரூபாய்  வரை கடனுதவி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். குறிப்பாக அரசு உதவித்தொகை அல்லது வட்டி மானியத் திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதியில்லாத மாணவர்கள் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். இந்த தொகையானது முழு கல்விக் கட்டணம் மற்றும் பாடநெறி தொடர்பான செலவுகளை Cover செய்ய உதவும்.

இந்தியாவில் உள்ள பொது அல்லது தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் திறமையான மாணவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி  உயர் படிப்பைத் தொடரலாம். மத்திய அரசின் உத்தரவாதத்துடன் எளிதாக கடனுதவியை  பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்கல்வித் துறை ஆனது செயல்படுத்தும். இந்த PM Vidyalaxmi Scheme போர்ட்டலையும் உயர்கல்வித் துறை ஆனது நிர்வகிக்கும். இந்த இணையதளத்தில் தகுதியுள்ள மாணவர்கள் கல்விக் கடன்கள் மற்றும் வட்டி மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply