PNB Local Bank Officer : பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!

பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆனது இந்தியாவின் முன்னணி அரசு பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஆகும். இந்தியாவில் உள்ள (PNB Local Bank Officer) பஞ்சாப் நேஷ்னல் வங்கிகளில் மொத்தமாக 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 85 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நிரப்பப்படும் காலியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ஆபிசர் வேலைக்கான ஏனைய தகுதிகள் என்ன, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முக்கிய விவரங்கள் பின்வருமாறு

வேலை – Local Bank Officer (LBO) – JMGS- I (மெயின் ஸ்ட்ரீம்)

  • மொத்த காலியிடங்களின்  எண்ணிக்கை – 750
  • தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை – 85
  • சம்பளம் – ரூ.48,480  முதல் ரூ.85,920 வரை
PNB Local Bank Officer - Platform Tamil

கல்வி தகுதி விவரங்கள் (PNB Local Bank Officer)

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்றவர்களாக இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு வருட காலம் பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் அவர்கள் கட்டாயமாக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுதவும், பேசவும்,  மற்றும் படிக்கவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள்

விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இந்த வேலைக்கான வயது வரம்பில் உள்ள  தளர்வுகளின் விவரங்கள் பின்வருமாறு.

  • SC மற்றும் ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்,
  • OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்,
  • PwBD பிரிவினருக்கு – 10 ஆண்டுகள்,
  • முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்.

தேர்வு செய்யும் முறை விவரங்கள்

இந்த பணியிடத்திற்காக ஆன்லைன் தேர்வு, மொழித் திறன் தேர்வு, மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். இந்த தேர்வுகள் டிசம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 இல் நடத்தப்படும். தேதிகள் சம்பத்தப்பட்ட  விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த தேர்வுகளின் மூலமாக இந்த பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் (PNB Local Bank Officer) தேர்வு செய்யப்படுவார்கள்.  தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்படும் தமிழ்நாடு பணிகளுக்கு கட்டாயமாக தமிழ் மொழி திறன் அவசியம் ஆகும்.

தமிழ்நாட்டில் தேர்வுகள் நடத்தப்படும் மையங்களின் விவரங்கள்

தமிழ்நாட்டில் இந்த பணியிடத்திற்கான தேர்வுகள் ஆனது சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர், சேலம், மற்றும் நாகர்கோயில் ஆகிய நகரங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்

இந்தப் பணிக்கான கட்டண விவரங்கள் பின்வருமாறு

இந்தப் பணிக்காக விண்ணப்பிக்கும் பெண்கள் மற்றும் ST/ SC/ PWD பிரிவினர்  விண்ணப்பக் கட்டணமாக ரூ.59/- செலுத்த வேண்டும்.

மற்றைய அனைத்து பிரிவினைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1180/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க கால விவரங்கள்

இந்தப் பணிக்காக விண்ணப்பிக்க தகுதியும் மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்,https://pnb.bank.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு தங்களது கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம்,  மற்றும் புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கால விவரங்கள்

விண்ணப்பிக்க தொடக்க நாள் –  03.11.2025

விண்ணப்பிக்க இறுதி நாள்    – 23.11.2025

இந்தப் பணி ஒரு நிரந்தரமான மற்றும் கௌரவமான அரசு வங்கிப் பணி என்பது குறிப்பிடத்தக்க சிறப்பான அம்சமாகும். விருப்பமுள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply