Police Station At Kilambakkam Bus Stand : அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

Police Station At Kilambakkam Bus Stand - அடுத்த 50 ஆண்டுகளை மனதில் வைத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மொத்தம் 140 கோடி ரூபாய் செலவில் திட்டங்களை உருவாக்கவுள்ளோம் :

Police Station At Kilambakkam Bus Stand : 86 ஏக்கர் நிலப்பரப்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. 6.50 லட்சம் சதுரடியில் இந்த பேருந்து நிலைய கட்டுமானம் ஆனது நடந்துள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் இதில் உரிய முறையில் திட்டமிடவில்லை. இந்த ஆட்சி சரியாகத் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறு மழைக்கே அங்கே மழை நீர் தேங்கும் சூழல் இருந்ததை சரி செய்ய நடவடிக்கை எடுத்து ரூ.13 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைத்துள்ளோம். பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ரயில் பாதை அருகே கட்டுமானம் செய்ய தென்னக ரயில்வேயிடம் கேட்டு, அந்த கட்டுமானத்திற்கு 14 கோடி செலவாகும் என்பதால் மத்திய மாநில அரசுகள் இந்த செலவை 50:50 எனப் பிரித்துச் செலவிட்டுக் கட்ட திட்டமிட்டுள்ளோம். அதிக அளவில் பயணிகள் வருகை இருக்கும் என்பதால் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கே ரூ.13 கோடி செலவில் காவல் நிலையத்தைக்  கட்ட (Police Station At Kilambakkam Bus Stand) உள்ளோம்.

மேலும் அருகில் ஒரு  பூங்காவையும் அங்கே கட்ட உள்ளோம். ரயில் நிலையம் ஒன்றையும்  அடுத்த 50 ஆண்டுகளைக் கணக்கிட்டு, அங்கே உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி அதற்காக ரூ.20 கோடி ரூபாயை வழங்கியுள்ளோம். அடுத்த 50 ஆண்டுகளை மனதில் வைத்து மொத்தம் 140 கோடி ரூபாய் செலவில் அங்கே திட்டங்களை உருவாக்கவுள்ளோம். இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது.  இந்த பேருந்து நிலையத்தில் குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள், அதை  இந்த  ஆட்சி சரி செய்யத் தயாராக இருக்கிறது

கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகும் ? - அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம் மாற்றப்பட்ட நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டிலிருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள்  செயல்பட்டு வந்த நிலையில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்  பல தாமதங்களுக்குப் பிறகு இப்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மிக விரைவில் படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். இப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை சுமார் 30% பேருந்துகள் அடுத்த ஓராண்டிற்கு இங்கிருந்து இயங்கும் நிலை இருக்கிறது. இங்கிருந்து பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேட்டில் தான் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் இங்கிருந்து பயணித்து வந்தனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியும் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள 16 ஏக்கர் நிலமும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமானதுதான். மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அதை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மிகப் பெரிய திட்டத்தைக் கொண்டு வர இந்த ஆட்சி திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு உதவ மிகப்பெரிய விஷயத்தைத் திட்டமிட்டு அதற்கான அடிப்படை வேலைகளைத் தொடங்க உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது தான் தேவைகள் என்ன என்பதை முழுமையாகக் கண்டறிய முடியும் என்றார்.

Latest Slideshows

Leave a Reply