இந்தியாவில் Polyhouse Farm மூலம் Modern விவசாய வளர்ச்சி

Polyhouse Farm என்பது விவசாயத்தின் ஒரு வடிவம் ஆகும். இந்தியாவில் தற்போது Polyhouse Farm விவசாயம் பிரபலமடைந்து வருகிறது. ஒரு மனிதனுக்கு உணவை தயார் செய்ய காய்கறிகள் முக்கியம் மற்றும் காய்கறிகளின் தேவை எப்பொழுதும் குறையாது. எனவே விவசாயம் என்பது எப்பொழுதும் ஒரு சிறந்த தொழில் ஆகும். தற்போது விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை ஆனது குறைந்து கொண்டே வருவதால் காய்கறிகளின் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் விவசாயம் செய்வதற்கான போதிய இடமும் இன்றைய காலகட்டத்தில் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது பல விவசாய இடங்களில் பெரிய, பெரிய அப்பார்ட்மென்ட்கள் ஆனது வந்துவிட்டது.

Polyhouse Farm விவசாயம் ஒரு குறிப்பு :

இந்த வகை பாலிஹவுஸ் Farm விவசாயம் என்பது Green House மற்றும் திறந்தவெளி சாகுபடியின் நன்மைகளை ஒருங்கிணைக்கின்ற ஒரு கலப்பின விவசாயம் ஆகும். சில பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கு கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆனது தேவைப்படுகின்றது. அந்த வகை பயிர்களுக்கு இந்த பாலிஹவுஸ் Farm விவசாயம் ஆனது ஒரு சிறந்த விவசாய முறையாகும். இந்த Polyhouse Farm விவசாயத்தில் பயிர்கள் ஆனது கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உட்புற சூழல்களில் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் உலோக சட்டங்களால் ஆன இந்த சூழல்கள் ஆனது வெளிப்படையான சுவர்கள் மற்றும் கூரைகளைக் கொண்டுள்ளன. இயற்கை காற்றோட்டம் கொண்ட பாலிஹவுஸ் Farm முறை ஆனது குறைந்த செலவில் மிகவும் பொருத்தமான விவசாயம் ஆகும். விவசாயிகள் பாலிஹவுஸ் Farm முறையை பயன்படுத்துவதன் மூலம் தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தி பயிர்களை பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து எளிதில் பாதுகாக்க முடியும்.

Polyhouse Farm விவசாயத்திற்கு சிறந்த தக்காளி செடி பயிர் :

மக்களிடம் தக்காளி செடியை வளர்ப்பதற்கு போதுமான இடம் இருந்தால் கூட போதுமானது. அதில் மக்கள் தக்காளி சாகுபடி செய்யலாம். பொதுவாக தக்காளி ஒரு வருடத்திற்கு இரண்டு முறை பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தக்காளிக்கு அதிக தேவை உள்ளதால் முக்கியமாக தக்காளி சாகுபடி செய்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். முதல் சாகுபடி  ஆனது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில்  தொடங்கி பிப்ரவரி அல்லது மார்ச் வரை நீடிக்கும். அந்த அளவிற்கு இடமில்லாதவர்கள் கூட தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் தங்களுக்கு பிடித்த காய்கறிகளை பயிரிட்டு அதன் மூலம் சம்பாதிக்கலாம். தக்காளி தவிர வெள்ளரிக்காய், கத்தரி, முட்டைக்கோஸ், கொத்தமல்லி மற்றும் குடை மிளகாய் ஆகியவை Polyhouse Farm முறை விவசாயத்திற்கு பொருத்தமான பயிர்கள் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply