Pondicherry to Tirupati Vande Bharat Train: விரைவில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சென்னை வழியாக வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதிலும் இருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் விரைவு ரயில்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். அது இப்போது புதிதாக புதுச்சேரியில் இருந்து சென்னை, விழுப்புரம் வழியாக திருப்பதிக்கு புதிய ரயில் சேவை தொடங்க உள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு மிக விரைவில் செல்ல முடியும்.

அதிக சுற்றுலா பயணிகள் கொண்ட புதுவை :

வண்ணமயமான கடற்கரைகள், புதுமையான பிரெஞ்சு கட்டிடக்கலை, ஆன்மீக மையங்கள், நாவினை சுண்டி இழுக்கும் அற்புதமான உணவுகள் என சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் சுண்டி இழுக்கிறது நம்ம புதுச்சேரி. விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் மூலமாக புதுவை நகரமே நிரம்பி காணப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கினால் இன்னும் சுற்றுலாவை மேம்படுத்தலாம்.

இதனால் இன்னும் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து சேரும் இடமாக புதுச்சேரி மாறும். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியும். இது நம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிக்கும். புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு இடையில் சுமார் 340 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இதனால் இதன் இடையில் உள்ள விழுப்புரம் மற்றும் சென்னை ஆகியவற்றில் உள்ள பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது பாண்டிச்சேரி, சென்னை மற்றும் திருப்பதி ஆகிய மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் வழியாக உள்ளது.

புதுச்சேரியில் இருந்து ஆரம்பிக்கும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மதுராந்தகம் வழியாக சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் சந்திப்பு ஆகிய இடங்களில் நின்று திருப்பதியை சென்றடையும். இதன் இடைப்பட்ட நகரங்களில் உள்ள மக்கள் அவர்களின் இலக்குகளுக்கு மிக விரைவாக சென்றடைய முடியும். அது மட்டுமல்லாமல் இனி திருப்பதிக்கு மிக எளிமையாகவும் விரைவாகவும் சென்றடைய முடியும்.

Pondicherry to Tirupati Vande Bharat Train - அடுத்த ஆண்டில் அறிமுகம் :

இந்தத் திட்டத்தின் படி புதுச்சேரியின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் அடுத்த வருடம் அதாவது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply